/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/நெல்லை பல்கலை.,யில் நாளை சர்வதேச கருத்தரங்கம் துவக்கம் : பல்கலை., பதிவாளர் பேட்டிநெல்லை பல்கலை.,யில் நாளை சர்வதேச கருத்தரங்கம் துவக்கம் : பல்கலை., பதிவாளர் பேட்டி
நெல்லை பல்கலை.,யில் நாளை சர்வதேச கருத்தரங்கம் துவக்கம் : பல்கலை., பதிவாளர் பேட்டி
நெல்லை பல்கலை.,யில் நாளை சர்வதேச கருத்தரங்கம் துவக்கம் : பல்கலை., பதிவாளர் பேட்டி
நெல்லை பல்கலை.,யில் நாளை சர்வதேச கருத்தரங்கம் துவக்கம் : பல்கலை., பதிவாளர் பேட்டி
ADDED : செப் 22, 2011 12:49 AM
திருநெல்வேலி : நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் நாளை(23ம்தேதி) முதல் 25ம்தேதி வரை கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஜினியரிங் மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான சர்வதேச கருத்தரங்கம் நடைபெறவுள்ளதாக பல்கலை., பதிவாளர் மாணிக்கம் தெரிவித்தார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது; நெல்லை பல்கலை., துவங்கி 21 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. பல்கலை., வரலாற்றில் முதன் முறையாக கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஜினியரிங் மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான சர்வதேச கருத்தரங்கம் பல்கலை., வளாகத்தில் நாளை(23ம்தேதி) முதல் 25ம்தேதி வரை நடக்கிறது. இந்த கருத்தரங்கை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.,கழகம், ஆஸ்திரேலியாவின் ஏஐஆர்சிசி., நிறுவனத்துடன் இணைந்து நடத்துகிறது. கருத்தரங்கில் அமெரிக்கா, சீனா, ஜெர்மன், ஐரோப்பா, சவுதி அரேபியா, ஈரான், இலங்கை, ஆப்பிரிக்கா உட்பட 42 நாடுகள் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் இன்டர்நெட் மூலம் பதிவு செய்த கட்டுரைகளில் இருந்து சிறந்த கட்டுரைகளை ஸ்பிரிங் பப்ளிக்கேஷன் என்ற அமைப்பின் நிபுணர்குழு 160 கட்டுரைகளை தேர்வு செய்துள்ளன. தேர்வு செய்யப்பட்டவர்கள் 3 நாட்கள் நடைபெறும் கருத்தரங்கில் 3 குழுக்களாக தங்களது கட்டுரைகளை சமர்பிக்கிவுள்ளனர். இந்த கருத்தரங்கின் துவக்க விழா நாளை(23ம்தேதி) காலை 8.30 மணிக்கு பல்கலை., வளாகத்தில் நடக்கிறது. பல்கலை., பதிவாளர் மாணிக்கம் வரவேற்கிறார். அமெரிக்காவின் நியூ செர்ஸி பல்கலை.,பேராசிரியர் செய்யது ஹேக் சிறப்புரை ஆற்றுகிறார். நெல்லை பல்கலை., கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங் பேராசிரியர் சதாசிவம், பேராசிரியர் சுருளியாண்டி வாழ்த்துரை வழங்குகின்றனர். கம்ப்யூட்டர் சயின்ஸ் சிண்டிகேட்உறுப்பினர் முருகன் நன்றி கூறுகிறார். 2 அமைச்சர்கள் பங்கேற்பு சர்வதேச கருத்தரங்கின் நிறைவு விழா வரும் 25ம்தேதி மாலை 3 மணிக்கு நடக்கிறது. விழாவிற்கு பல்கலை., பதிவாளர் மாணிக்கம் தலைமை வகிக்கிறார். சீனியர் பேராசிரியர் சதாசிவம் வரவேற்கிறார். சிறப்பு விருந்தினராக கதர் மற்றும் கிராம தொழில்கள் துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன் கலந்து கொண்டு பேசுகிறார். தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் உதயகுமார், நெல்லை எம்எல்ஏ., நயினார் நாகேந்திரன் நிறைவுறை ஆற்றுகின்றனர். மூன்று நாட்கள் நடைபெறவுள்ள சர்வதேச கருத்தரங்கில் ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பிக்கும் பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. பல்கலை., சிண்டிகேட் உறுப்பினர் முருகன் நன்றி கூறுகிறார். இவ்வாறு பல்கலை., பதிவாளர் மாணிக்கம் தெரிவித்தார்.பேட்டியின் போது பல்கலை., முன்னாள் பதிவாளர் பாக்கியம், சிண்டிகேட் உறுப்பினர் முருகன் உடனிருந்தனர்.