/உள்ளூர் செய்திகள்/கடலூர்/முறைகேடான குடிநீர் இணைப்புதுண்டிப்பு: அதிகாரிகள் அதிரடிமுறைகேடான குடிநீர் இணைப்புதுண்டிப்பு: அதிகாரிகள் அதிரடி
முறைகேடான குடிநீர் இணைப்புதுண்டிப்பு: அதிகாரிகள் அதிரடி
முறைகேடான குடிநீர் இணைப்புதுண்டிப்பு: அதிகாரிகள் அதிரடி
முறைகேடான குடிநீர் இணைப்புதுண்டிப்பு: அதிகாரிகள் அதிரடி
ADDED : ஜூலை 16, 2011 02:20 AM
முதுநகர்:கடலூர் முதுநகர் பகுதியில் முறைகேடான குடிநீர் இணைப்புகள்
துண்டிக்கப்பட்டன.கடலூõர் முதுநகர் பகுதிக்கு கேப்பர் மலையிலிருந்து
தண்ணீர் கொண்டு வரப்பட்டு, மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகளில் ஏற்றப்பட்டு
குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக
முதுநகர் பகுதியில் பொது பைப் மற்றும் வீடுகளில் உள்ள நகராட்சி
இணைப்புகளில் குடிநீர் வரவில்லை.இதனால் முதுநகர் பகுதி மக்கள் குடிநீர்
இல்லாமல் அவதியடைந்தனர்.
இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து
அதிகாரிகள் கேப்பர் மலையிலிருந்து தண்ணீர் வரும் மெயின் லைனை ஆய்வு
செய்தனர். அதில் புருகீஸ்பேட்டை, வசந்தராயன்பாளையம், சலங்கைநகர் பகுதிகளைச்
சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் முறைகேடாக இணைப்பு கொடுத்து குடிநீர்
எடுத்து வருவது தெரியவந்தது.அதனைத் தொடர்ந்து நேற்று 20க்கும் மேற்பட்ட
முறைகேடான இணைப்புகளை நகராட்சி அதிகாரிகள் துண்டித்தனர்.
மேலும் முதுநகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் முறைகேடான
இணைப்புகள் கண்டறிந்து துண்டிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.