கல்விக்கடன் சிறப்பு முகாமிற்கு உத்தரவு
கல்விக்கடன் சிறப்பு முகாமிற்கு உத்தரவு
கல்விக்கடன் சிறப்பு முகாமிற்கு உத்தரவு
ADDED : ஆக 24, 2011 12:26 AM
தேனி : வங்கிகளில் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்குவதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க, சிறப்பு முகாம்களை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
தகுதியான மாணவர்களுக்கு உயர்கல்வி கற்பதற்காக, கல்விக்கடன் வழங்க மறுப்பதால் அவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. தகுதியுள்ள மாணவர்களுக்கு கல்விக்கடனை சில வங்கிகள் தரமறுப்பதாக புகார்கள் அரசுக்கு வந்துள்ளன. அனைத்து மாவட்டங்களிலும், கலெக்டர் தலைமையில், சிறப்பு முகாம்களை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.