மகேந்திரா நிறுவன விற்பனை அதிகரிப்பு
மகேந்திரா நிறுவன விற்பனை அதிகரிப்பு
மகேந்திரா நிறுவன விற்பனை அதிகரிப்பு
ADDED : செப் 01, 2011 03:32 PM
புதுடில்லி : ஆட்டோ தயாரிப்பு நிறுவனமான மகேந்திரா அன் மகேந்திரா நிறுவனத்தின் விற்பனை ஆகஸ்ட் மாதத்தில் 30.38 சதவீதமாக அதிகரித்துள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் இந்நிறுவனம் 37,684 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் 28,903 வாகனங்களை மட்டுமே இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. உள்நாட்டு சந்தையில் இந்நிறுவனத்தின் வாகன விற்பனை 31.09 சதவீதம் அதிகரித்து 35,756 ஆக உள்ளது. ஸ்கார்பியோ, சைலோ, பொலிரோ உள்ளிட்ட கார்களின் மொத்த விற்பனை 13.54 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே போன்று ஆகஸ்ட் மாதத்தில் மூன்று சக்கர வாகன விற்பனையும் 26.01 சதவீதம் அதிகரித்து 6,394 ஆக உள்ளது.