வெளிநாட்டு விமானிகள் வெளியேற உத்தரவு
வெளிநாட்டு விமானிகள் வெளியேற உத்தரவு
வெளிநாட்டு விமானிகள் வெளியேற உத்தரவு
ADDED : ஜூலை 11, 2011 07:44 PM
திருவனந்தபுரம்: இந்திய விமான நிறுவனங்களில் பணிபுரியும் வெளிநாட்டு விமானிகள் வரும் 2013ம் ஆண்டிற்க்குள் பணியிலிருந்து வெளியேறற விமான கட்டுப்பாட்டு இயக்குநரகம் கூறியுள்ளது.
இது தொடர்பாக விமான கட்டுப்பாட்டு இயக்குநர் பாரத் பூஷன் கூறுகையில், வெளிநாட்டு விமானிகள் 2013 ம் ஆண்டிற்குள் பணியை விட்டு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. திட்டமிட்டபடியே கெடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் செலவுகள் மிச்சமாகும். வெளிநாட்டு விமானிகளுக்கு அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது. தற்போது இந்தியாவில் 415 வெளிநாட்டு விமானிகள் பணிபுரிகின்றனர். தற்போது இந்தியாவில் 1300 விமானிகள் உள்ளனர்.தற்போது நாம் வெளிநாட்டு விமானிகளை சார்ந்துள்ளோம். நமது விமானிகளில் பலர் துணைவிமானிகளாக உள்ளனர் என கூறினார்.