/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/வழக்குகள் தொடர்வது மட்டுமே அரசின் முக்கிய வேலையா? : சிவகாமி சாடல்வழக்குகள் தொடர்வது மட்டுமே அரசின் முக்கிய வேலையா? : சிவகாமி சாடல்
வழக்குகள் தொடர்வது மட்டுமே அரசின் முக்கிய வேலையா? : சிவகாமி சாடல்
வழக்குகள் தொடர்வது மட்டுமே அரசின் முக்கிய வேலையா? : சிவகாமி சாடல்
வழக்குகள் தொடர்வது மட்டுமே அரசின் முக்கிய வேலையா? : சிவகாமி சாடல்
மரக்காணம் : தி.மு.க., வினர் மீது நில அபகரிப்பு வழக்கு தொடர்வதையே முக்கிய வேலையாக இந்த அரசு செயல்படுத்தி வருகின்றது என சிவகாமி ஐ.ஏ.எஸ்., தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் நிறுவனத் தலைவர் சிவகாமி பேசியதாவது : மரக்காணம், ஒலக்கூர் ஆகிய ஒன்றியங்களில் பஞ்சமிநில மீட்பு விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற உள்ளது. கடந்த ஆட்சியில் பஞ்சமி நிலத்தை மீட்டு எடுக்க ஓர் ஆணையத்தை அரசு துவக்கியது. இந்த ஆட்சியில் ஆணையம் காணாமல் போய்விட்டது. இருக்கும் சட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை ஆனால் தி.மு.க., வினர் மீது நில அபகரிப்பு வழக்கு தொடர்வதையே முக்கிய வேலையாக இந்த அரசு செயல்படுத்தி வருகின்றது. தலித் மக்களுக்கான பஞ்சமி நில மீட்பு நடவடிக்கையை அ.தி.மு.க., அரசு செய்யத் தவறினால், டில்லிக்கு சென்று பிரதமர் மன்மேகன் சிங்கை நேரில் சந்தித்து பேசவுள்ளோம். இவ்வாறு சிவகாமி ஐ.ஏ.எஸ்., பேசினார்.