/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/முத்து மாரியம்மன் கோவிலில் உற்சவ விழாமுத்து மாரியம்மன் கோவிலில் உற்சவ விழா
முத்து மாரியம்மன் கோவிலில் உற்சவ விழா
முத்து மாரியம்மன் கோவிலில் உற்சவ விழா
முத்து மாரியம்மன் கோவிலில் உற்சவ விழா
ADDED : ஆக 07, 2011 01:38 AM
ஓசூர்: ஓசூர் மாருதி நகர் அருள்மிகு முத்து மாரியம்மன் கோவில் 23வது ஆண்டு உற்சவ விழா வரும் 11ம் தேதி துவங்குகிறது.
விழாவையொட்டி 11ம் தேதி காலை 9.15 மணிக்கு ஓசூர் கோட்டை மாரியம்மன் கோவிலில் இருந்து தாய் வீட்டு சீதனம் எடுத்து வரும் நிகழ்ச்சியும், 11 மணிக்கு விஷேச அபிஷேக பூஜையும், மதியம் 12 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாருதி நகர், கலைஞர் நகர், கிருஷ்ணா நகர், அண்ணாமலை நகர் மற்றும் சிப்காட் ஹவுசிங் காலனி ஆகிய இடங்கள் வழியாக மாலை 6 மணிக்கு அம்மன் வீதி உலா நடக்கிறது. வரும் 12ம் தேதி அதிகாலை 2.30 மணி முதல் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், துர்கா ஹோமமும், காலை 5. 30 மணி முதல் 6.30 மணி வரை சிறப்பு விஷேச பூஜைகளும், மதியம் 2 மணிக்கு மேல் கோட்டை மாரியம்மன் கோவிலில் இருந்து முத்து மாரியம்மன் கோவிலுக்கு சக்தி கிரகம், பால்குடம், அலகு குத்துதல், விமான அலகு குத்துதல், அக்னி கரம் எடுத்து வருவதலும் மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜையும், 8 மணிக்கு இன்னிச்சை கச்சேரி நடக்கிறது. வரும் 13ம் தேதி காலை 11 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானமும், இரவு 8.30 மணிக்கு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது. 14ம் தேதி காலை 6 மணி முதல் மஞ்சள் நீராட்டு விழாவும், அம்மனை ஆற்றுக்கு அழைத்து செல்லும் நிகழ்ச்சியும் நடக்கிறது. ஏற்பாடுகளை தர்மகர்த்தா வெங்கடேஷ், தலைவர் ரங்கன், செயலாளர் ராஜூ, துணைத்தலைவர் கதிர்வேல், பொருளாளர் சேகர் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.