UPDATED : செப் 01, 2011 07:31 PM
ADDED : செப் 01, 2011 07:24 PM
ஆத்தூர்: மணல் கடத்தலை தடுக்க சென்ற கிராம உதவியாளர் மீது மர்ம கும்பல்தாக்குதல் நடத்தியது.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் அருகே சித்தேரி வழியாக செல்லும் சின்னாற்றில் மணல் கடத்தல் நடைபெறுவதாக வந்த புகாரை அடுத்து அதை தடுக்க டி.ஆர்.ஓ., செல்வராஜ், ஆர்.ஐ., அன்பு செழியன்,வி.ஏ.ஓ., ஜெயா மற்றும் கிராம உதவியாளர் மும்முடியான் ஆகியோர் சென்றனர். மணல் கடத்தலில் சக்திவேல் என்பவர் ஈடுபட்டதை தொடர்ந்து அவரை அழைத்து செல்லும் வழியில் மும்முடியானை ஒரு கும்பல் தாக்கியதால் அவர் காயமடைந்தார்.மும்முடியானை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தலைவாசல் போலீசார் தாக்குதல் நடத்திய கும்பலை தேடிவருகின்றனர்.