ADDED : ஜூலை 27, 2011 05:25 AM
வாடிப்பட்டி : விவசாய வணிகத் துணை இயக்குனர் கூறியதாவது: நாம்
உபயோகப்படுத்தும் உணவு பண்டங்களின் தரத்தின் சுத்ததன்மை, கலப்பிடமின்மை
ஆகியவற்றை கண்ணால் கண்டறிவது கஷ்டம்.
தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனைக்கு
வருகின்றன. இதனால் உடல்நலக் குறைவு ஏற்படுகிறது. மத்திய அரசால் செயல்படும்
அக்மார்க் ஒரு தன்னார்வ திட்டம். தரமான பொருட்களை உற்பத்தி செய்பவர்கள் அதை
விற்பனை செய்பவர்கள் அக்மார்க் உரிமத்திற்கு விண்ணப்பிக்கலாம். அவர்களின்
பொருட்கள் மாநில அரசின் அக்மார்க் தரம் பிரிப்பு ஆய்வகங்களில் ஆய்வு
செய்யப்பட்டு அக்மார்க் முத்திரை வழங்கப்படும். அரிசியின் தரத்திற்கு அரசு
வழங்கும் சான்று அக்மார்க் மட்டுமே. அக்மார்க் தரச்சான்று பெற்ற அரிசி
மட்டுமே தரமானவை. எனவே நுகர்வோர் அரிசி வாங்கும் போது அக்மார்க் தரச்சான்று
உள்ளதா என பார்த்து வாங்க வேண்டும் என வேளாண்மை வணிகத் துணை இயக்குனர்
சாராநாத் பாபு தெரிவித்துள்ளார்.