Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா : இன்று அனைத்து கட்சி கூட்டம்

பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா : இன்று அனைத்து கட்சி கூட்டம்

பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா : இன்று அனைத்து கட்சி கூட்டம்

பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா : இன்று அனைத்து கட்சி கூட்டம்

ADDED : ஜூலை 14, 2011 01:59 AM


Google News
Latest Tamil News

புதுடில்லி : பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா விவகாரத்தில், ஒருமித்த கருத்தை எட்டுவதற்காக, அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை, லோக்சபா சபாநாயகர் மீரா குமார் இன்று கூட்டியுள்ளார்.

லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும், 'பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா', 1996ம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ளது.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், லோக்சபாவில் மொத்தமுள்ள, 543 இடங்களில். 181 இடங்கள் பெண்களுக்காக ஒதுக்கப்படும். அதேபோல், 28 மாநில சட்டசபைகளில் மொத்தம் உள்ள, 4,109 இடங்களில், 1,370 இடங்கள் பெண்களுக்காக ஒதுக்கப்படும்.

கடந்த, 2010, மார்ச் 9ம் தேதி ராஜ்யசபாவில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இருந்தாலும், லோக்சபாவில் நிறைவேற்ற முடியவில்லை. இது தொடர்பாக கட்சிகள் இடையே ஒருமித்த கருத்தை எட்ட, பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை. இந்நிலையில், பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா குறித்து விவாதிப்பதற்காக, அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை, லோக்சபா சபாநாயகர் மீரா குமார் இன்று கூட்டியுள்ளார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us