Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/புதிய வழிகாட்டி மதிப்பின்படி பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு : அக்.,1 முதல் அமல்

புதிய வழிகாட்டி மதிப்பின்படி பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு : அக்.,1 முதல் அமல்

புதிய வழிகாட்டி மதிப்பின்படி பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு : அக்.,1 முதல் அமல்

புதிய வழிகாட்டி மதிப்பின்படி பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு : அக்.,1 முதல் அமல்

ADDED : ஜூலை 13, 2011 12:48 AM


Google News

பவர் பத்திரம் பதிவுக்கட்டணம் உட்பட சில பதிவுக் கட்டணங்கள் நேற்று உயர்த்தப்பட்ட நிலையில், 3 ஆண்டுகளுக்கு பின், புதிய வழிகாட்டி மதிப்பின்படி, மற்ற பத்திரப்பதிவு கட்டணம் அனைத்தும் அக்.,1 முதல் உயர்த்தப்படுகிறது.

ஐந்தாண்டுகளுக்கு முன், இடமதிப்பிற்கேற்ப பத்திரப்பதிவு கட்டணம் நிர்ணியக்கப்பட்டது.

பின், 2007 ஆக., 1ல் புதிய வழிகாட்டி மதிப்பை வெளியிட்ட அரசு, 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டணம் நிர்ணயிக்கலாம் என்றது. கடந்த 3 ஆண்டுகளில் நிலம், கட்டடங்களின் மதிப்பு, வாங்க முடியாத அளவிற்கு பல மடங்கு உயர்ந்தது. ஒரு சதுரஅடியின் விலை, 3, 000 ரூபாயை தாண்டியது. ஆனால் பத்திரப்பதிவின்போது, வழிகாட்டி மதிப்பின்படி, குறைவான கட்டணம் செலுத்தி, அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தினர்.



அரசு உத்தரவுப்படி, அடுத்த மாதம் முதல், புதிய வழிகாட்டி மதிப்பு வெளியிட வேண்டும். இதனால், புதிய வழிகாட்டு மதிப்பை நிர்ணயிக்கும் பணியில், அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு பகுதிக்கும் சென்று, சதுர அடி விலை குறித்து ஆய்வு செய்கின்றனர். இதில் அதிகபட்ச தொகையை தான், வழிகாட்டி மதிப்பாக நிர்ணயிப்பர். இதன் காரணமாக, பத்திரப் பதிவு கட்டணம் அதிகரிக்கும். அக்., 1 முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. இவை எத்தனை ஆண்டுகளுக்கு பொருந்தும் என்பது குறித்து, பின்னர் அரசு அறிவிக்கும்.



- நமது சிறப்பு நிருபர் -







      Our Apps Available On




      Dinamalar

      Follow us