/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/நுகர்வோரிடம் கனிவு காட்டுங்கள்:சமையல் காஸ் டீலர்களுக்கு அறிவுரைநுகர்வோரிடம் கனிவு காட்டுங்கள்:சமையல் காஸ் டீலர்களுக்கு அறிவுரை
நுகர்வோரிடம் கனிவு காட்டுங்கள்:சமையல் காஸ் டீலர்களுக்கு அறிவுரை
நுகர்வோரிடம் கனிவு காட்டுங்கள்:சமையல் காஸ் டீலர்களுக்கு அறிவுரை
நுகர்வோரிடம் கனிவு காட்டுங்கள்:சமையல் காஸ் டீலர்களுக்கு அறிவுரை
ADDED : ஜூலை 31, 2011 10:50 PM
பந்தலூர் : 'நுகர்வோரிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும்' என, சமையல் காஸ்
டீலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பந்தலூர் தாசில்தார் அலுவலகத்தில்
நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கூடலூர் ஆர்.டி.ஓ., தனசேகரன் தலைமை
வகித்தார். தாசில்தார் பாபு, வட்ட வழங்கல் அலுவலர் பிரபாகரன் முன்னிலை
வகித்தனர். பந்தலூர், கூடலூர் வட்டார நுகர்வோர் பாதுகாப்பு சங்க நிர்வாகி
விஜயசிங்கம் பேசுகையில், ''என்.சி.எம்.எஸ்., காஸ் குடோன் ஓவேலி பகுதியில்
உள்ள நிலையில், அனுமதியின்றி கூடலூர் பகுதியில் செயல்படுவது ஆபத்து
ஏற்படுத்தும். பந்தலூர் பகுதியில் மாலை நேரத்தில் காஸ் சிலிண்டர் விநியோகம்
கடத்தலுக்கு வழிவகுக்கும்,'' என்றார். 'காஸ் குடோன் ஓவேலியில் இருந்தும்,
சாலை மோசமாக உள்ளதால் லாரி செல்ல முடியாததால் கூடலூர் பகுதியில்
தற்காலிகமாக செயல்பட்டு வரும் குடோன் விரைவில் அனுமதி பெற்று பாதுகாப்புடன்
கூடிய குடோனில் செயல்படுத்தப்படும்' என என்.சி.எம்.எஸ்., மேலாளர்
விஸ்வநாதன் தெரிவித்தார். 'செப்டம்பர் மாதத்துக்குள் குடோன் மாற்றவேண்டும்'
என, ஆர்.டி.ஓ. உத்தரவிட்டார். 'காஸ் இணைப்பு பெற்றுள்ள நுகர்வோரிடம்
டீலர்கள் கனிவாக நடந்துக்கொள்ளவும், நுகர்வோர்கள் பாதிக்காத வகையில்
சிலிண்டர்கள் விநியோகிக்கவும் நடவடிக்கை எடுக்கும்படி' ஆர்.டி.ஓ.,
கேட்டுக்கொண்டார். கூட்டத்தில் ஆர்.டி.ஓ. அலுவலக உதவியாளர் மகேஷ், காஸ்
டீலர்கள் உதயகுமார் (தங்கபிரியா), பைசல் (கோல்டன்), விஸ்வநாதன்
என்.சி.எம்.எஸ்., நுகர்வோர் பாதுகாப்பு சங்க நிர்வாகி ராஜன், கவுன்சிலர்
அசோக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.