Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/கோட்டை சாலை மும்முனை சந்திப்பு பஸ் ஸ்டாப் மாற்றம்

கோட்டை சாலை மும்முனை சந்திப்பு பஸ் ஸ்டாப் மாற்றம்

கோட்டை சாலை மும்முனை சந்திப்பு பஸ் ஸ்டாப் மாற்றம்

கோட்டை சாலை மும்முனை சந்திப்பு பஸ் ஸ்டாப் மாற்றம்

ADDED : ஜூலை 24, 2011 01:02 AM


Google News

நாமக்கல்: 'காலைக்கதிர்' செய்தி எதிரொலியாக, கோட்டை சாலையின் மும்முனை சந்திப்பில் இருந்த பஸ் நிறுத்தும் இடம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இது, வாகனப் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து அபாயத்தை குறைக்கும் வகையில் அமைந்துள்ளது. நாமக்கல், கோட்டை சாலை வழியாக சேலம், திருச்செங்கோடு, ஈரோடு போன்ற மாவட்டங்களுக்கு பஸ்கள் செல்கிறது. பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் செல்லும் பிரதான சாலையாகவும் கோட்டை சாலை விளங்கி வருகிறது. இச்சாலையின் துவக்கத்தில், மூன்று சாலை ஒரே இடத்தில் சந்திக்கின்றன. அந்த இடத்தில் பஸ்கள் நின்று, பயணிகளை ஏற்றி, இறங்கிச் செல்கிறது. அதனால், அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், விபத்து அபாயமும் நிலவி வந்தது. இதுதொடர்பாக, கடந்த, 21ம் தேதி 'காலைக்கதிர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக, கோட்டை சாலையின் மும்முனை சந்திப்பில் பஸ்கள் நிறுத்தும் இடத்தை மாற்றி அமைக்க போலீஸார் உத்தரவிட்டுள்ளனர். உழவர்சந்தை எதிரே பஸ்களை நிறுத்தி, பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. போலீஸாரின் இந்நடவடிக்கை, விபத்து அபாயத்தை தவிர்ப்பதுடன், போக்குவரத்து நெரிசலையும் குறைத்துள்ளது என, வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us