/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/சிவகங்கை "கிராபைட்டில்' 30 லட்சம் டன் கிராபைட் துகள்கள் கிடைக்கும்சிவகங்கை "கிராபைட்டில்' 30 லட்சம் டன் கிராபைட் துகள்கள் கிடைக்கும்
சிவகங்கை "கிராபைட்டில்' 30 லட்சம் டன் கிராபைட் துகள்கள் கிடைக்கும்
சிவகங்கை "கிராபைட்டில்' 30 லட்சம் டன் கிராபைட் துகள்கள் கிடைக்கும்
சிவகங்கை "கிராபைட்டில்' 30 லட்சம் டன் கிராபைட் துகள்கள் கிடைக்கும்
ADDED : ஜூலை 24, 2011 09:23 PM
சிவகங்கை : ''சிவகங்கை கிராபைட் ஆலையில் 30 லட்சம் டன் வரை கிராபைட் துகள்கள் இருக்கிறது,'' என, கிராபைட் இந்தியா நிறுவன தொழில்நுட்ப இயக்குனர் (ஓய்வு) டாக்டர் ஷா தெரிவித்தார்.
அவர் கூறுகையில்,'' சிவகங்கையில் கோமாளிபட்டி முதல் பூவந்தி வரை 600 ஏக்கர் பரப்பில், கிராபைட் துகள்கள் கிடைக்கின்றன. இங்கு, 15 மீட்டர் ஆழத்தில் 30 லட்சம் டன் வரை கிராபைட் துகள் எடுக்கலாம். தற்போது 'டாமின்' நிறுவனம் மூலம் 7 லட்சம் டன் கிராபைட் துகள்கள் எடுத்துள்ளனர். உலகளவில் ஒப்பிடும் போது, இங்குள்ள கிராபைட் 14 சதவீத தரத்தில் உள்ளது. இதில், 'சிந்தடிக்', 'நேச்சுரல்' என இரண்டு வகை உண்டு. சிவகங்கையில் 'நேச்சுரல்' கிராபைட் கிடைக்கிறது. இதில் இருந்து 'பைன்' பவுடர், 'கொலாய்டல்' மற்றும் 'எக்ஸ்பேன்டட்' கிராபைட் எடுக்கலாம். இம்மூலப்பொருட்களை வைத்து, கிரீஸ், ஆட்டோமொபைல், கார்பன், பென்சில் போன்ற பொருட்கள் தயாரிக்கலாம். தங்கம் உருக்கும் குடுவை 'கிராபைட்'டில் தயாராகிறது. ஆந்திரா ராஜமுந்திரியில் கிடைக்கும் மண்ணுடன், கிராபைட் துகள் கலந்து குடுவை தயாராகிறது. மானாமதுரை மண்ணில் கிராபைட் துகளை கலந்து தங்கம் உருக்கும் குடுவை தயாரிப்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம். இங்கு, 5 லட்சம் முதல் 50 லட்ச ரூபாய் முதலீட்டில் கிராபைட் உப தொழில்கள் துவக்கலாம். இதனால், வேலைவாய்ப்புகள் பெருகும்,'' என்றார்.