தர்மபுரி: தர்மபுரி இலக்கியம்பட்டி ஸ்ரீராம் டிராக்டர் கம்பெனியில் மஞ்சள்
சாகுபடியில் உயிர் தொழில் நுட்பங்கள் குறித்து தமிழ்நாடு வேளாண்
பல்கலைக்கழகம் மற்றும் பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையம் சார்பில்
விவசாயிகளுக்கான கருத்தரங்கு நேற்று நடந்தது.மகேந்திரா அன்ட் மகேந்திரா
லிமிடெட் பகுதி மேலாளர் பஃபே தலைமை வகித்தார்.
பாப்பாரப்பட்டி வேளாண்
அறிவியில் நிலைய தலைவர் தமிழ்செல்வன் மஞ்சள் சாகுபடியில் விவசாயிகள்
கடைபிடிக்க வேண்டிய உயர் தொழில் நுட்பங்கள் குறித்து பேசினார்.வேளாண்
அறிவியல் நிலைய பூச்சியல் துறை பேராசிரியர் சண்முகம் மஞ்சள் சாகுபடியில்
கூடுதல் மகசூலை அதிகரிக்க வேண்டிய முறைகள், பயிர் பாதுகாப்பு மருந்து
தொழில் நுட்பம் குறித்து பேசினார்.தோட்டக்கலைத் துறை பேராசிரியர் இந்துமதி,
'பசுமை புரட்சி குறித்தும், வீரிய ரககங்கள் மற்றும் வேளாண்மை கருவிகள்
குறித்தும்' விவசாயிகளுக்கு தெரிவித்தார்.