Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/அரியலூர்/இந்திய கலாச்சாரத்தை சீரழிக்கும் "டிவி'க்கள் அரியலூரில் கொல்லிமலை சித்தர் வருத்தம்

இந்திய கலாச்சாரத்தை சீரழிக்கும் "டிவி'க்கள் அரியலூரில் கொல்லிமலை சித்தர் வருத்தம்

இந்திய கலாச்சாரத்தை சீரழிக்கும் "டிவி'க்கள் அரியலூரில் கொல்லிமலை சித்தர் வருத்தம்

இந்திய கலாச்சாரத்தை சீரழிக்கும் "டிவி'க்கள் அரியலூரில் கொல்லிமலை சித்தர் வருத்தம்

ADDED : ஆக 17, 2011 01:27 AM


Google News
அரியலூர்: அரியலூர் அருகே வெங்கடகிருஷ்ணாபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில், ஆடி பௌர்ணமியை முன்னிட்டு நடந்த திருவிளக்கு பூஜையில் பஞ்சாயத்து தலைவர் முத்துசாமி வரவேற்றார்.

மாரியம்மன் கோவில் திருப்பணி குழு சார்பில் நடத்தப்பட்ட இந்த திருவிளக்கு பூஜையை முன்னின்று நடத்திய, கொல்லிமலை சித்தர் பகவான் காமராஜ் ஸ்வாமிகள் பேசியதாவது: ஆடி பௌர்ணமி நாளில் திருவிளக்கு பூஜை நடத்துவது என்பது மிகவும் சக்தி வாய்ந்தது. இந்த திருவிளக்கு பூஜையில் பங்கேற்று செயல்படுத்தும் பெண்களுக்கும், அவர் தம் குடும்பத்தாருக்கும் ஏற்பட்டுள்ள, சகல தோஷங்களும் விலகி கடன் தொல்லை நீங்கும். விவசாயம் செழிப்பதுடன் வேலைவாய்ப்பு பெருகும். முழுமை பெறாமல் உள்ள இந்த மாரியம்மன் கோவில் திருப்பணியும் செம்மையாக நிறைவடைந்து, விரைவில் கும்பாபிஷேகம் நடக்கும். மாரி என்பது மழையை குறிக்கும் சொல்லாகும். இந்த மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை துவங்கியவுடன், சுபிக்ஷத்தை குறிக்கும் வகையில் மழையும் பெய்து கொண்டிருக்கிறது. ஆன்மிகம் என்பது தேசத்தையும், நமது மதத்தையும் காப்பாற்ற கூடியது. மனிதனை மனிதனாக வாழ வைப்பது தான் மதம். ராமகிருஷ்ண பரமஹம்சர், ஸ்வாமி விவேகானந்தர், வள்ளலார் உள்ளிட்ட பல்வேறு ஞானிகள் அவதரித்த இந்த புண்ணிய பூமியில், பணத்துக்காக ஆசைப்பட்டு சிலர் ஆன்மிகத்தை சீரழிக்கின்றனர். ஒவ்வொரு மனிதனும் கோயில் திருப்பணிக்கு உதவுவது தான் உண்மையான ஆன்மிக பணி. ஆனால், ஒரு சில 'டிவி'க்கள் ஆபாச நிகழ்ச்சிகளை அடிக்கடி ஒளிபரப்பி, பாரம்பரியமான நமது இந்திய கலாச்சாரத்தை சீரழிக்கிறார்கள். அரியலூர் மாவட்டத்தில், கடந்த ஆண்டு கோவில் திருப்பணி துவங்கி பாதியில் நின்று போன உடையவர் தீயனூர் சிவன் கோவில், லால்குடி அருகே இடங்கி மங்கலம் சிவன் கோயில் , பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பொம்மனப்பாடி, கோயில்பாளையம் ஆகிய ஊர்களில் உள்ள சிவன் கோவில்கள் உள்பட பல்வேறு கோவில்களில் நடத்தப்பட்ட திருவிளக்கு பூஜையை தொடர்ந்து, அக்கோவில்களில் நல்ல முறையில் திருப்பணி நிறைவடைந்து கும்பாபிஷேகம் நடந்துள்ளது. அதே போல இந்த வெங்கடகிருஷ்ணாபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகமும், சிறப்பாக நடைபெறும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us