ரயில் மின்பாதை கம்பி திருட்டு ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்
ரயில் மின்பாதை கம்பி திருட்டு ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்
ரயில் மின்பாதை கம்பி திருட்டு ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்
விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே, நள்ளிரவில் ரயில்வே மின் கம்பி திருடப்பட்டதால், 17 ரயில்கள் இரண்டு மணி நேரம் தாமதமாக சென்றன.
விருத்தாசலம் ரயில் நிலையத்திலிருந்து டீசல் இன்ஜின் வரவழைத்து அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் விருத்தாசலத்திற்கு புறப்பட்டுச் சென்றது. ரயில் மின்பாதை துண்டிக்கப்பட்டதால், சென்னை மற்றும் திருச்சி மார்க்கத்தில் வந்துகொண்டிருந்த முத்துநகர், பொதிகை, நெல்லை, பாண்டியன், ஹவுரா, மங்களூர், மலைக்கோட்டை உள்ளிட்ட 17 ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. விழுப்புரத்தில் இருந்து ரயில்வே மின் ஊழியர்கள் விரைந்து வந்து, புதிய மின் கம்பிகளை இணைத்து அதிகாலை 3 மணிக்கு மின் இணைப்பு வழங்கியதைத் தொடர்ந்து, நிறுத்தப்பட்டிருந்த ரயில்கள் இரண்டு மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. மின் கம்பி திருடுபோனது குறித்து, விழுப்புரம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.