போலோ விளையாட்டு களமாக மாறிய கார்கில் போர்க்களம்
போலோ விளையாட்டு களமாக மாறிய கார்கில் போர்க்களம்
போலோ விளையாட்டு களமாக மாறிய கார்கில் போர்க்களம்
அசார்காதிர்திராஸ் (காஷ்மீர்): 12 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய வராலாற்றில் கார்கில் போரில் பாகி்ஸ்தானை வென்ற முக்கிய நினைவு சின்னமாக விளங்கிய ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள திராஸ் பகுதி, இன்று போலோ விளையாட்டு மைதானமாக மாறியுள்ளது.
கடந்த 1999-ம் ஆண்டு ஜூன் மாதம் 26-ம் தேதி நடந்த கார்கில் போரினை இந்தியர்கள் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். இந்திய-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் ஜம்மு நகரிலிருந்து லடாக் வழியாக சென்றால் 300 கி.மீ.தொலைவில் என்.எச் 1-டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திராஸ் பகுதியானது உயர்ந்த பனிமலைப்பகுதியாகும். பாகிஸ்தான் துருப்புகள் அத்துமீறி நுழைய முயன்றதை இந்திய ஜவான்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தமால், அவர்களை விரட்டியடித்து வெற்றி பெற்றனர். வரும் 26-ம் தேதி இந்திய ராணுவம் கார்கில் போரின் வெற்றியின் 12-வது ஆண்டினை கொண்டாட உள்ள நிலையில், தற்போது திராஸ் பகுதியானது பணக்காரர்கள் விளையாடும் போலோ விளையாட்டு களமாக மாறியுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் அமைதி நிலவி வரும் நிலையில் பாலிவுட் திரைப்படங்கள் எடுக்கும் இடமாகவும் மாறியுள்ளது. வரலாற்று சின்னமான இதனை சுற்றுலா வரைபடத்தில் சேர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தற்போது குதிரைகள் நிறைந்த இடமாகவும், தூசு படர்ந்த தளமாக கார்கில் போர்க்களம் காணப்படுகிறது. இந்நிலையில் இப்பகுதியில் 2011-ம் போலோ விளையாட்டு போட்டிகள் துவங்கஉள்ளன. இது குறித்து முதல்வர் லலித்சூரியில் முதல்வர் ஒமர் அப்துல்லா கூறுகையில், கார்கில் உள்ள திராஸ் பகுதி இரு காரணங்களால் இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் பெறுகிறது. ஒன்று கார்கில் போர், இரண்டாவது உலகில் இரண்டாவது மிகவும் குளிர்ந்த பனிப்பிரதேசம் ஆகும். இப்பகுதியை சுற்றுலா தளமாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் திராஸ் பகுதியை பற்றி மக்கள் அவ்வளவாக தெரிந்து கொள்ளவில்லை என்றார்.


