/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ஒரு லட்சம் ரூபாய் பணத்துடன் மகளிர் குழு நிர்வாகி தலைமறைவுஒரு லட்சம் ரூபாய் பணத்துடன் மகளிர் குழு நிர்வாகி தலைமறைவு
ஒரு லட்சம் ரூபாய் பணத்துடன் மகளிர் குழு நிர்வாகி தலைமறைவு
ஒரு லட்சம் ரூபாய் பணத்துடன் மகளிர் குழு நிர்வாகி தலைமறைவு
ஒரு லட்சம் ரூபாய் பணத்துடன் மகளிர் குழு நிர்வாகி தலைமறைவு
ADDED : ஜூலை 31, 2011 10:50 PM
பந்தலூர் : நீலகிரி மாவட்டம் பந்தலூர் கொளப்பள்ளி டான்டீ பகுதியில், ஒரு
லட்சம் ரூபாயுடன் தலைமறைவான மகளிர் குழு ஊக்குநரை கண்டுபிடித்து தர
வலியுறுத்தி புகார் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து கொளப்பள்ளி டான்டீ
பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீவிநாயகா மகளிர் சுய உதவிக்குழு
உறுப்பினர்கள் சார்பில் விஜயா என்பவர் சேரம்பாடி போலீஸ் நிலையத்தில்
கொடுத்துள்ள புகாரில் தெரிவித்துள்ளதாவது:-கொளப்பள்ளி டான்டீ பகுதியில்
2004ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஸ்ரீ விநாயகா மகளிர் சுய உதவிக்குழு செயல்பட
துவங்கியது. சேரன்ஸ் அறக்கட்டளை வழிகாட்டுதலின்படி செயல்பட்ட குழுவிற்கு
முதல் மற்றும் இரண்டாம் கட்ட கடனாக கூடலூர் ரெப்கோ வங்கி மூலம் 60 ஆயிரம்
மற்றும் 1லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் கடன் பெற்று முறையாக திரும்பி
செலுத்தப்பட்டது. தொடர்ந்து சுழல்நிதியாக 60 ஆயிரம் பெற்று அதில் குழு
ஊக்குநர் செல்வி என்பவருக்கு 40 ஆயிரம் ரூபாய், குழு உறுப்பினர் லிசி
என்பவருக்கு 20 ஆயிரம் ரூபாய் கடன் வழங்குவது என்று தீர்மானிக்கப்பட்டது.
ஆனால், கடன் தொகை மற்றும் குழு உறுப்பினர்கள் சேமிப்பு கணக்கிலுள்ள தொகை என
மொத்தம் 1 லட்ச ரூபாய் பணத்துடன் ஊக்குநர் செல்வி தலைமறைவாகிவிட்டார்.
கடன்தொகையை திரும்ப செலுத்துமாறு வங்கி நிர்வாகம் வலியுறுத்தி வரும்
நிலையில், கடன்தொகையை திரும்ப செலுத்தவும் இயலாமல், தொடர்ந்து குழுவிற்கு
கடன்பெறவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பணத்துடன் தலைமறைவான குழு
ஊக்குநர் செல்வி என்பவரை கண்டுபிடித்து கடன் தொகையை வசூலித்து தர வேண்டும்.
இவ்வாறு, புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.