ADDED : ஜூலை 29, 2011 11:12 PM
பெரியகுளம் : தேனி மாவட்டம், டி.கள்ளிப்பட்டி கஸ்தூரிபாய்தெருவைச் சேர்ந்தவர் முத்து (90).
விவசாயி. கடந்த சில நாட்களாக உடல்நல குறைவாக இருந்தார். நேற்று காலை 11.15 மணிக்கு இறந்தார். இவர் இறந்த பிரிவை தாங்க முடியாத இவரது மனைவி நாகம்மாள் (87), 5 நிமிடத்தில் இறந்தார். சாவிலும் பிரியாத தம்பதியை பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.