/உள்ளூர் செய்திகள்/சேலம்/கொண்டலாம்பட்டி பகுதி செயலாளருக்கு மாநகர அ.தி.மு.க., வில் வலுக்கும் எதிர்ப்புகொண்டலாம்பட்டி பகுதி செயலாளருக்கு மாநகர அ.தி.மு.க., வில் வலுக்கும் எதிர்ப்பு
கொண்டலாம்பட்டி பகுதி செயலாளருக்கு மாநகர அ.தி.மு.க., வில் வலுக்கும் எதிர்ப்பு
கொண்டலாம்பட்டி பகுதி செயலாளருக்கு மாநகர அ.தி.மு.க., வில் வலுக்கும் எதிர்ப்பு
கொண்டலாம்பட்டி பகுதி செயலாளருக்கு மாநகர அ.தி.மு.க., வில் வலுக்கும் எதிர்ப்பு
ADDED : செப் 21, 2011 01:06 AM
சேலம்: சேலம் கொண்டலாம்பட்டி, அ.தி.மு.க., பகுதி செயலாளர் சண்முகத்துக்கு, கவுன்சிலர் சீட் வழங்க கூடாது என, மாநகர அ.தி.மு.க., வில் எதிர்ப்பு வலுத்து வருகிறது.
கொண்டலாம்பட்டியை சேர்ந்த, அ.தி.மு.க., வினர் நேற்று சென்னைக்கு நேரடியாக சென்று, அ.தி.மு.க., தலைமைக்கு புகார் மனுவை வழங்கி திரும்பியுள்ளனர். சேலம் கொண்டலாம்பட்டி, அ.தி.மு.க., பகுதி செயலாளராக சண்முகம் இருக்கிறார். 2001-06 ம் ஆண்டு, கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்ட சண்முகம், கொண்டலாம்பட்டி மண்டல குழு தலைவராக பொறுப்பு வகித்தார். 2006ம் ஆண்டு, சண்முகம் வெற்றி பெற்ற, 55 வது வார்டு பெண்கள் வார்டாக மாற்றம் செய்யப்பட்டது. எனவே, மாநகராட்சி, 54 வது வார்டில் போட்டியிட்டார். அதிருப்தி அடைந்த அ.தி.மு.க., வினர், சண்முகத்துக்கு எதிராக களம் இறங்கினர். தி.மு.க., வை சேர்ந்த அசோகனிடம் தோல்வியுற்றார். வரும் உள்ளாட்சி தேர்தலில், மாநகராட்சி, 54, 58 ஆகிய இரண்டு வார்டுகளில் போட்டியிட விருப்ப மனுக்களை வழங்கினார். மேலும், மாநகராட்சி, 55 வது வார்டில் அவரது சகோதரி விஜயலட்சுமி விருப்ப மனுவை வழங்கியுள்ளார். சண்முகம் மீண்டும் வேறு வார்டுகளில் போட்டியிட விருப்ப மனு வழங்கியது, கட்சி நிர்வாகிகள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன், நெடுஞ்சாலை நகரில் உள்ள அமைச்சர் இடைப்பாடி பழனிசாமியின் வீட்டை, அ.தி.மு.க., வை சேர்ந்தவர்கள் திடீரென்று முற்றுகையிட்டனர். 'சண்முகத்துக்கு மீண்டும் சீட் வழங்க கூடாது' என்ற கோரிக்கையை முன் வைத்து சென்றனர். எனவே, அ.தி.மு.க., வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சூழலில் நேற்று கொண்டலாம்பட்டி பகுதி, அ.தி.மு.க., வை சேர்ந்த, 30க்கும் மேற்பட்டோர் சென்னைக்கு சென்றுள்ளனர். அங்கு கட்சி தலைமையிடம், 'சண்முகத்துக்கு சீட் வழங்க கூடாது. கட்சிக்காக பல ஆண்டாக பாடுப்பட்ட பலர் உள்ளனர். அவர்களுக்கு வாய்ப்பை வழங்க வேண்டும்' என்ற கோரிக்கையை மனுவாக கொடுத்துள்ளனர். கொண்டலாம்பட்ட, அ.தி.மு.க., செயலாளர் சண்முகத்துக்கு எதிராக, அ.தி.மு.க., வினர் திசை திரும்பியுள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.