புதிய நடைமுறையில் 355 பேருக்கு பட்டா
புதிய நடைமுறையில் 355 பேருக்கு பட்டா
புதிய நடைமுறையில் 355 பேருக்கு பட்டா
ADDED : ஆக 14, 2011 02:34 AM
தேனி : புதிய நடைமுறையில் பட்டா மாறுதல் வழங்க அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து, இரண்டு வாரத்திற்குள் 477 பேர் விண்ணப்பித்தனர்.
கடந்த ஆகஸ்ட் 1 முதல் பெறப்பட்ட 477 உட்பிரிவு அல்லாத பட்டா மாறுதல் மனுக்கள் மீது, தாலுகா அலுவலகங்களில் பரிசீலனை நடந்தது.
கலெக்டர் பழனிசாமி தலைமையில், பெரியகுளம் தாலுகா அலுவலகத்திலும், டி.ஆர்.ஓ., பிருந்தாதேவி தலைமையில், உத்தமபாளையம் தாலுகா அலுவல கத்திலும், மற்ற தாலுகா அலுவலகங்களில் ஆர்.டி.ஓ.,க் கள் தலைமையிலும் பரிசீலனை நடந்தது. இதில் தகுதியான 355 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது.