/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/உள்ளாட்சியில் போட்டியிட புதுகையில் 180 பேர் விருப்ப மனுஉள்ளாட்சியில் போட்டியிட புதுகையில் 180 பேர் விருப்ப மனு
உள்ளாட்சியில் போட்டியிட புதுகையில் 180 பேர் விருப்ப மனு
உள்ளாட்சியில் போட்டியிட புதுகையில் 180 பேர் விருப்ப மனு
உள்ளாட்சியில் போட்டியிட புதுகையில் 180 பேர் விருப்ப மனு
ADDED : செப் 03, 2011 12:31 AM
புதுக்கோட்டை: தமிழக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் முதல் வாரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடமிருந்து நேற்றுமுதல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க., அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் பெறுவதற்காக தொகுதிவாரியாக தனி கவுண்டர்கள் அமைக்கப்பட்டிருந்தது. விருப்ப மனு கொடுப்பதற்காக ஆதரவாளர்கள் புடைசூழ அ.தி.மு.க., வினர் பலர் நேற்று காலை முதலே அ.தி.மு.க., அலுவலகத்தில் குவிந்தனர்.
புதுக்கோட்டை நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து அ.தி.மு.க., நகரச் செயலாளர் பாஸ்கர் மனைவி விஜயஸ்ரீ, அமைச்சர் சுப்பிரமணியன் முன்னிலையில் அ.தி.மு.க., மாவட்டச் செயலாளர் ராமைய்யாவிடம் மனு அளித்தார். இவரைத் தொடர்ந்து நகராட்சி கவுன்சிலர், டவுன் பஞ்., தலைவர், கவுன்சிலர், மாவட்ட பஞ்., கவுன்சிலர், பஞ்., யூனியன் கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து 60 பெண்கள் உட்பட 180 பேர் விருப்ப மனு அளித்தனர். ஐந்தாம் தேதி மாலை ஐந்துமணி வரை விருப்ப மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.