/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/கரும்பு விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்கரும்பு விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்
கரும்பு விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்
கரும்பு விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்
கரும்பு விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்
ADDED : செப் 06, 2011 10:42 PM
திருவெண்ணெய்நல்லூர் : திருவெண்ணெய்நல்லூர் அடுத்த ஏனாதிமங்கலத்தில் கரும்பு விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடந்தது.
கரும்பு அலுவலர் கோபிசிகாமணி தலைமை தாங்கினார். விவசாயிகள் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் ரகோத்தமன், ஊராட்சி தலைவர் இந்திரா முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கரும்பு டன்னுக்கு 3 ஆயிரம் வழங்க வேண்டும், கடந்தாண்டு சப்ளை செய்த கரும்பிற்கு ஊக்கத்தொகையாக டன்னுக்கு 100 ரூபாய் வழங்க வேண்டும். வெட்டுகூலியை அரசே ஏற்க வேண்டும். கரும்பு டிராக்டர்களை ஆலை வளா கத்திற்குள் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 9 கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. வாகன உரிமையாளர்கள் சங்க தலைவர் சுப்ரமணி, முன்னாள் ஊராட்சி தலைவர் மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.