Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/நீச்சல் குளத்தில் நீந்தும் மாணவர்களுக்கு பாதுகாப்பு கவசம் இல்லாததால் நோய் தாக்கும் நிலை

நீச்சல் குளத்தில் நீந்தும் மாணவர்களுக்கு பாதுகாப்பு கவசம் இல்லாததால் நோய் தாக்கும் நிலை

நீச்சல் குளத்தில் நீந்தும் மாணவர்களுக்கு பாதுகாப்பு கவசம் இல்லாததால் நோய் தாக்கும் நிலை

நீச்சல் குளத்தில் நீந்தும் மாணவர்களுக்கு பாதுகாப்பு கவசம் இல்லாததால் நோய் தாக்கும் நிலை

ADDED : ஆக 04, 2011 11:59 PM


Google News
ராமநாதபுரம்:ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் நீச்சல் குளத்தில் நீந்தும் மாணவர்களுக்கு, எவ்வித பாதுகாப்பு கவசமும் அளிக்காததால்,விபத்து அபாயம் உள்ளது. இந்த நீச்சல் குளம் 11.5 அடி ஆழம் வரை உள்ளது. இது ஆபத்தானது என விளையாட்டு நிபுணர்கள் எச்சரித்தனர். ஆழத்தை குறைக்க அரசு உத்தரவிட்டும், இன்று வரை நடவடிக்கை இன்றி, போட்டிகள் நடத்தப்படுகின்றன. நீச்சல் குளத்தில் மாசுக்களை அகற்ற, அதிகளவில் குளோரினேசன் செய்யப்படுகிறது. பயிற்சி, போட்டியில் பங்கேற்கும் மாணவர்களின் கண்களில் எரிச்சல் ஏற்பட்டு சிரமப்படுகின்றனர். பயிற்சி அல்லது போட்டியின் போது, இவர்களுக்கு கண் கண்ணாடிகள் மற்றும் உபகரணங்கள் வழங்க அரசு நிதி உதவி வழங்கியும், அதை வாங்கி கொடுக்காமல், பள்ளிகள் செயல்படுகின்றன.

இதை மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும், கண்டு கொள்வதில்லை. போட்டியில் பங்கேற்ற பின் விளையாட்டு ஆணையம் மூலம் 'கிளீனிங் ஆயில்' கொடுக்கப்படுவதில்லை. மாணவர்கள், தோல் அலர்ஜியால் அவதிப்படுகின்றனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் பால் சுதந்திரதாஸ் கூறியதாவது: நீச்சல் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் பள்ளியிலிருந்து கண் கண்ணாடி கொண்டு வரவேண்டும். அதை பள்ளிகள் தான் பின்பற்ற வேண்டும். நீச்சல் பயிற்சியாளர் பணியிடம் நிரப்பப்படாததால் மாணவர்கள் திறமையாளர்களாவதில் சிக்கல் நீடிக்கிறது, என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us