எடியூரப்பா பதவிக்கு வந்தது மேலும் ஒரு ஆபத்து; சுரங்க மோசடி புகார்; லோக்அயுக்தா அறிக்கை லீக்
எடியூரப்பா பதவிக்கு வந்தது மேலும் ஒரு ஆபத்து; சுரங்க மோசடி புகார்; லோக்அயுக்தா அறிக்கை லீக்
எடியூரப்பா பதவிக்கு வந்தது மேலும் ஒரு ஆபத்து; சுரங்க மோசடி புகார்; லோக்அயுக்தா அறிக்கை லீக்

பெங்களூரு: கர்நாடகாவுக்கு முதல்வராக பொறுப்பேற்றது முதல் எடியூரப்பா பதவிக்கு பலக்கட்ட ஆபத்துக்கள் வந்துள்ளன.
இத்துடன் தம்மீது சி.பி.ஐ., விசாரணை நடத்தட்டும் என்று உண்ணாவிரதம் இருந்த மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை சேர்ந்த குமாரசாமியும் தொடர்புடையதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பணிகளில் நடக்கும் முறைகேடுகள் குறித்து விசாரித்து வரும் லோக் அயுக்தா ( ஓம்பட்ஸ்மேன்) என்ற அமைப்பு கர்நாடக முதல்வர் எடியூரப்பா மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரித்து அறிக்கை தயாரித்துள்ளது. இன்னும் சில நாளில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவுள்ள நிலையில் சில பத்திரிகைகளுக்கு இந்த அறிக்கையில் உள்ள விஷயம் லீக் ஆகியிருக்கிறது.
எடியூரப்பாவின் குடும்பத்தினர்: ஐந்தாயிரம் பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில் உள்ள சாராம்சங்கள் விவரம் வருமாறு: ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு சுரங்க நிறுவனத்திற்கு இம்மாநிலத்தில் சுரங்கத்திற்கு அனுமதி அளித்து இந்நிறுவனத்திடமிருந்து பல கோடியை தனது அறக்கட்டளைக்கு நன்கொடையாக பெற்றுள்ளார். இவரது மகன் விஜயேந்திரா, மருமகன் ஷோகன்குமார் ஆகியோர், பெங்களுரூ சர்வதேச விமான நிலையம் அருகே ராய்ச்சினாஹள்ளியில் சுமார் 1 ஏக்கர் நிலத்தை ஒரு தனியார் சுரங்க நிறுவனத்திற்கு விற்பனை செய்து ரூ. 20 கோடி கமிஷன் பெற்றுள்ளனர்.
எடியூரப்பா குடும்பத்தினர் துவக்கியுள்ள பிரேரானா எனும் பெயரில் அறக்கட்டளைக்கு 4 சட்டவிரோத சுரங்க நிறுவனங்களிடமிருந்து தலா ரூ. 10 கோடி வரை நன்கொடை பெற்றுள்ளனர். கடந்த 14 மாதங்களில் நடந்த ஆய்வில் முதல்வர் எடியூரப்பா ஆட்சியில் சுரங்க மோசடியினால் அரசுக்கு ரூ 1827 கோடி , வருவாய் இழப்பை ஏற்படுத்தியிருக்கின்றனர். மேலும் அமைச்சர்கள் சோமன்னா, ஜனார்த்தனரெட்டி, கருணாகரரெட்டி, ஸ்ரீராமுலு ஆகிய 4 முக்கிய அமைச்சர்களும், பா.ஜ. எம்.பி. ஆனந்த் சிங் என்பவரும் , சில உயர் அதிகாரிகளும் சுரங்க மோசடியில் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. மாஜி முதல்வரான குமாரசாமியும், தனது அவரது ஆட்சியின் போது சுரங்க நிறுவனங்களிடமிருந்து கோடி கோடியாக பணம் பெற்றுள்ளார்.
எடியூரப்பா பதவி விலக கோரி்க்கை : இந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பது உண்மையாக இருக்கும்பட்சத்தில் மாநில முதல்வர் எடியூரப்பாவை மாற்ற பா.ஜ., நடவடிக்கை எடுக்கும் என தெரிகிறது. லோக்பால் வரைவு மசோதா விவகாரத்தை கையிலெடுத்து காங்கிரசுக்கு நெருக்கடி கொடுத்து வரும் வேளையில் எடியூரப்பா மீதான புகார் பா.ஜ.,வுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தலைமை செயலரிடம் லோக்அயுக்தா தலைவர் சந்தோஷ் ஹெக்டே நாளை அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சுரங்க மோசடியில் ஈடுபட்டுள்ள எடியூரப்பா பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் குரல் எழுப்பியுள்ளது.
லோக் அயுக்தா அமைப்பின் தலைவர் சந்தோஷ் ஹெக்டே இது குறித்து கூறுகையில்: எடியூரப்பா நேரிடையாக ஆதாயம் பெறாவிட்டாலும், அவரது மகன், மருமகன் ஆகியார் நடத்தும் அறக்கட்டளை சார்பில் ரூ. 10 கோடி வரை பெற்றுள்ளனர். மேலும் சில முக்கிய ஆவணங்களும் கிடைத்துள்ளன என்றார். அறிக்கை லீக் ஆனது தொடர்பாக தனது போன் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.