/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/விழுப்புரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி ஒத்திவைப்புவிழுப்புரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி ஒத்திவைப்பு
விழுப்புரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி ஒத்திவைப்பு
விழுப்புரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி ஒத்திவைப்பு
விழுப்புரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி ஒத்திவைப்பு
ADDED : ஜூலை 19, 2011 12:34 AM
விழுப்புரம் : விழுப்புரத்தில் நெடுஞ்சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி வரும் 23, 24 ஆகிய தேதிகளில் நடக்கிறது.
விழுப்புரத்தில் மேல் தெருவில் துவங்கி திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள மகளிர் கல்லூரி வரையில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகிறது. இதற்கான அறிவிப்பு நெடுஞ்சாலைதுறை சார்பில் நேற்று முன்தினம் ஒலி பெருக்கி மூலம் செய்யப்பட்டது. விழுப்புரத்தில் நேற்று காலை ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை நெடுஞ்சாலைத்துறையினர் மேற் கொண்டனர். இதையொட்டி திருச்சி நெடுஞ்சாலையோரம் ஆக்கிரமிப்பு செய்திருந்த கடைக்காரர்கள் ஷெட்டர்கள், மேற்கூரைகள் அனைத்தையும் நேற்று காலை தாங்களே முன்வந்து அகற்றினர். இதற்கிடையே பள்ளி, கல்லூரி விடுமுறையான சனி, ஞாயிறு இரு நாட்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் மணிமேகலை அறிவுரை வழங்கினார். இதன்படி ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை வரும் 23, 24 தேதிகளில் மேற்கொள்ள நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். நேற்று காலை திருச்சி சாலையில் தனியார் மருத்துவமனை அருகே உள்ள நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் அலுவலக பழைய கட்டடத்தை அகற்றினர். நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர் விமலா மேற்பார்வையில் பொக்லைன் மூலம் அந்த கட்டடம் இடித்து தள்ளப்பட்டது.