/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/இந்திய கம்யூ., சார்பில் தர்ணா போராட்டம்இந்திய கம்யூ., சார்பில் தர்ணா போராட்டம்
இந்திய கம்யூ., சார்பில் தர்ணா போராட்டம்
இந்திய கம்யூ., சார்பில் தர்ணா போராட்டம்
இந்திய கம்யூ., சார்பில் தர்ணா போராட்டம்
ADDED : ஜூலை 27, 2011 01:25 AM
புதுச்சேரி : முதலியார்பேட்டையில் இந்திய கம்யூ., கிளை கூட்டம் நடந்தது.
பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார். நகர செயலாளர் ஆனந்து, நகர குழு உறுப்பினர் ஏகாம் பரம் ஆகியோர் அரசியல் நிலையை விளக்கிப் பேசி னர். கிளை செயலாளர் சக்திவேல் கிளை செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தார். கூட்டத்தில், முதலியார் பேட்டை தொகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தை வேகப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண் டும். விடுதலை நகர், தியாகு முதலியார் நகர், நைனார் மண்டபம் ஆகிய பகுதிகளில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். சாலைகளில் உள்ள எரியாத மின் விளக்குகளைச் சரி செய்ய வேண்டும். மழைக்காலம் துவங்கும் முன் வாய்க்கால்களைத் தூர் வார வேண்டும். கோரிக்கைகளை முன்வைத்து ஆகஸ்ட் 9ம் தேதி முதலியார்பேட்டை வானொலி திடலில் தமுக்கடித்து தர்ணா போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.