ரேஷனில் இலவச அரிசிக்கு ரூ.4,500 கோடி : கடத்தலை தடுக்க அதிரடி
ரேஷனில் இலவச அரிசிக்கு ரூ.4,500 கோடி : கடத்தலை தடுக்க அதிரடி
ரேஷனில் இலவச அரிசிக்கு ரூ.4,500 கோடி : கடத்தலை தடுக்க அதிரடி
சென்னை : முந்தைய அரசால் கலைக்கப்பட்ட, ஐந்து எல்லையோர ரோந்து படைகள் மீண்டும் புதுப்பிக்கப்படும்.
பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் உணவுப் பாதுகாப்பை வழங்கும் வகையில், அனைவருக்குமான பொது வினியோக திட்டத்தை அரசு பின்பற்றுகிறது. சர்க்கரை, கோதுமை, மண்ணெண்ணெய், சலுகை விலையில், பொது வினியோக திட்டத்தின் கீழ் தொடர்ந்து வழங்கப்பட உள்ளது. அரசு பதவியேற்ற இரண்டு மாதங்களில், ரேஷன் அரிசி கடத்திய, 67 பேரை, குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்துள்ளது. ரேஷன் அரிசி பதுக்கல் மற்றும் கடத்தியவர்களுக்கு எதிராக, 1,519 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
பொது வினியோக திட்டத்தில், இலவச அரிசி வழங்குவதால் ஏற்படும் கூடுதல் மானியத்தை கணக்கில் கொண்டு, 2011-12ம் ஆண்டிற்கு கூடுதல் மானியத்திற்காக, திருத்த வரவு-செலவு திட்ட மதிப்பீட்டில், 4,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில், கோதுமை மாவு, மசாலாப் பொட்டலங்களை சலுகை விலையில் வழங்கும் பொது வினியோக சிறப்பு திட்டத்தை, வரும் டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டித்துள்ளது.