Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

ADDED : செப் 06, 2011 12:01 AM


Google News

தர்மபுரி: தர்மபுரி தெற்கு மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் மற்றும் உள்ளாட்சி தேர்தல் விண்ணப்பம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

மாவட்ட அவைத்தலைவர் கந்தசாமி தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், சட்டதிருத்தக்குழு உறுப்பினர் கீரை விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன், முன்னாள் துணை சபாநாயகர் துரைசாமி ஆகியோர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விண்ணப்பங்களை வழங்கினர். உள்ளாட்சி தேர்தலில் தர்மபுரி நகராட்சி மற்றும் அரூர், மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி ஆகிய ஒன்றியங்களில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட கட்சி மற்றும் கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெற செய்ய அயராது உழைத்தல். கிருஷ்ணகிரி அணையிலிருந்து வலதுபுற கால்வாய் வழியாக மொரப்பூர் பகுதியில் உள்ள, 30 ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடும் வகையில், கால்வாய் அமைத்தல் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நகர பொறுப்பாளர் சிட்டி முருகேசன், ஒன்றிய செயலாளர்கள் மனோகரன், வேடம்மாள், பொன்னுசாமி, இலக்கிய அணி தங்கமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.



தர்மபுரி வடக்கு மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் தனகோடி தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர் இன்பசேகரன், தலைமை நிர்வாகி பொன்னுராம் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் கட்சியினருக்கு விண்ணப்பங்கள் வழங்கும் நிகழ்ச்சி துவக்கி வைத்தனர். தர்மபுரி வடக்கு மாவட்டத்தில் உள்ள காரிமங்கலம், பாலக்கோடு பென்னாகரம், நல்லம்பள்ளி ஆகிய ஒன்றியங்களில் உள்ளாட்சி பதவிகளுக்கு போட்டியிடும் கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சியினரை வெற்றிபெற செய்ய தீவிரமாக உழைத்தல் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஒன்றிய செயலாளர்கள் துரைசாமி, கிருஷ்ணன், காளியப்பன், வெங்கடாசலம், யூனியன் சேர்மன் தடங்கம் சுப்பிரமணி, நகர செயலாளர்கள் முரளி, தமிழ்செல்வன், பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us