/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/சொத்துவரி செலுத்தாத கட்டடங்களில் குடிநீர் : இணைப்பு துண்டிப்பு; அதிகாரிகள் அதிரடிசொத்துவரி செலுத்தாத கட்டடங்களில் குடிநீர் : இணைப்பு துண்டிப்பு; அதிகாரிகள் அதிரடி
சொத்துவரி செலுத்தாத கட்டடங்களில் குடிநீர் : இணைப்பு துண்டிப்பு; அதிகாரிகள் அதிரடி
சொத்துவரி செலுத்தாத கட்டடங்களில் குடிநீர் : இணைப்பு துண்டிப்பு; அதிகாரிகள் அதிரடி
சொத்துவரி செலுத்தாத கட்டடங்களில் குடிநீர் : இணைப்பு துண்டிப்பு; அதிகாரிகள் அதிரடி
ADDED : ஆக 24, 2011 02:38 AM
திருநெல்வேலி : சொத்துவரி செலுத்தாத கட்டடங்களில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர்.
நெல்லை மாநகராட்சி பாளை., மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் 2011-12 முதல் அரையாண்டிற்கு சொத்துவரி மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்தாத கட்டடங்களில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாளை., வி.எம்.சத்திரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு நிலை-1ல் மூன்று கட்டடங்களில் பல ஆண்டுகளாக சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்தாத இடங்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர். பாளை., வார்டு உதவிக்கமிஷனர் ரங்கநாயகி அறிவுரைப்படி உதவி வருவாய் அலுவலர் வெங்கட்ராமன் தலைமையில் வருவாய் உதவியாளர்கள் கருணாகரன், முத்துக்கிருஷ்ணன், சங்கரரராஜ், வடிவேல்முருகன், ராஜ் அடங்கிய குழுவினர் வரி செலுத்தாத வீடுகள் மற்றும் கட்டடங்களில் குடிநீர் இணைப்பை துண்டித்தனர். எனவே வரிசெலுத்தாததவர்கள் வரியை செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பை தவிர்க்க மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.