Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/கிராம சபை கூட்டம்: 1,970 தீர்மானங்கள் நிறைவேறியதுஒரு ஊராட்சியில் ஒத்திவைப்பு

கிராம சபை கூட்டம்: 1,970 தீர்மானங்கள் நிறைவேறியதுஒரு ஊராட்சியில் ஒத்திவைப்பு

கிராம சபை கூட்டம்: 1,970 தீர்மானங்கள் நிறைவேறியதுஒரு ஊராட்சியில் ஒத்திவைப்பு

கிராம சபை கூட்டம்: 1,970 தீர்மானங்கள் நிறைவேறியதுஒரு ஊராட்சியில் ஒத்திவைப்பு

ADDED : ஜூலை 24, 2011 02:25 AM


Google News

திருப்பூர் : வடக்கு அவிநாசிபாளையம் ஊராட்சி நீங்கலாக, மாவட்டத்தில் உள்ள 272 ஊராட்சிகளில் நேற்று கிராமசபை கூட்டம் நடந்தது; மொத்தம் 50 ஆயிரத்து 85 பேர் பங்கேற்றனர்; 1,970 தீர்மானங்கள் நிறைவேற்றப்

பட்டன.தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருந்ததால், கடந்த மே மாதம் நடக்க வேண்டிய கிராம சபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

அரசு உத்தரவுப்படி, நேற்று தமிழகம் முழுவதும் கிராமசபை கூட்டங்கள் நடந்தன. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 273 ஊராட்சிகளிலும் அதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது; பற்றாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.போதுமான உறுப்பினர்கள் இல்லாத காரணத்தால், பொங்கலூர் ஒன்றியம் வடக்கு அவிநாசிபாளையம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது; மீதி 272 ஊராட்சிகளிலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகளை தேர்வு செய்தும், இதர அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற் படுத்த கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



உடுமலை ஒன்றியம் ராவணாபுரம் ஊராட்சியில் நடந்த கூட்டத்தில், ஊரக தொழில்துறை அமைச்சர் சண்முகவேலு, கலெக்டர் மதிவாணன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது, பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கலெக்டர் உத்தரவிட்டார். மாவட்டம் முழுவதும் நடந்த கூட்டங்களில், 22 ஆயிரத்து 998 ஆண்கள்; 27 ஆயிரத்து 87 பெண்கள் என, 50 ஆயிரத்து 85 பேர் பங்கேற்றனர்;1,970 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இலவச வெள்ளாடு திட்டத்தில் ஏமாற்றம்: இக்கூட்டத்தில்,' நடப்பு ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட உள்ள பணிகள்; அதற்காக தயாரித்த பட்டியல் விவரம்; முழுசுகாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திறந்த வெளியில் மலம் கழிப்பதை தடுப்பது; கிராமப்புறத்தில் உள்ள அனைத்து வீடுகளில் கழிப்பிடம் அமைப்பது; பள்ளிகள், அங்கான்வாடிமையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.



முதல்வர் ஜெயலலிதா தனது தேர்தல் வாக்குறுதியில், ஏழை மற்றும் விதவை பெண்களுக்கு வெள்ளாடு மற்றும் மாடு வழங்கப்படும் என அறிவித்தார்; இத்திட்டத்திற்காக கிராமசபை கூட்டத்தில், ஆடு, மாடு எண்ணிக்கை குறித்து கிராமம் வாரியாக கணக்கெடுப்பு நடத்தப்படும் என, முன்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் நேற்றைய கூட்டத்தில் இத்திட்டம் குறித்து எவ்வித கணக்கெடுப்பும் நடத்தப்படவில்லை; அதுகுறித்து விவாதிக்கவும் இல்லை. அதிகாரிகளிடம் கேட்ட போது,'கணக்கெடுப்பு நடத்துவது குறித்து எவ்வித அறிவிப்பும் இது வரை அரசிடம் இருந்து வரவில்லை; திட்டத்துக்கான கருத்துரு தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. விரைவில் அதற்குரிய அறிவிப்பு வெளிவரும்; அதன் பின் கணக்கெடுப்பு நடத்தப்படும்,' என்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us