ADDED : செப் 06, 2011 10:42 PM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி சட்டசபை தொகுதி ஓட்டுப்பதிவு மைய அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடந்தது.
கள்ளக்குறிச்சி மகாலட்சுமி திருமண மண்டபத்தில் நடந்த பயிற்சிக்கு ஆர்.டி.ஓ., உமாபதி தலைமை தாங்கினார். இதில் தாசில்தார் வைகுண்டவரதன், தேர்தல் துணை தாசில்தார் அருங்குளவன், துயர் துடைப்பு தாசில்தார் மணிவண்ணன், மண்டல துணை தாசில்தார் பாண்டியன், வருவாய் ஆய்வாளர் குமரன், வி.ஏ.ஓ., முகமது கவுஸ் உட்பட ஓட்டுப்பதிவு மைய அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.