ADDED : செப் 01, 2011 02:05 AM
கூடலூர் : கூடலூர் கொட்டாய்மேடு பகுதியில் நோய் தாக்கி குட்டியானை இறந்தது.கூடலூர் செருமுள்ளி கிராமம் மேபீல்டு கொட்டாய்மேடு பகுதியில் குட்டியானை ஒன்று இறந்து கிடப்பதாக அப்பகுதியினர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
வன அலுவலர் தீபக் பில்ஜி, வனச்சரகர் முத்துசாமி மற்றும் வன ஊழியர்கள் அங்கு சென்று பார்த்தனர். அங்கு சுமார் 5 வயதுடைய பெண் குட்டி யானை இறந்து கிடந்தது. இறந்த குட்டியானையின் உடலை கால்நடை டாக்டர் கலைவானன் பிரேத பரிசோதனை செய்தார். 'குட்டி யானை இறந்து மூன்று நாட்கள் இருக்கலாம்; நோய் தாக்கி இறந்துள்ளது. இதன் உடல் பாகங்கள் பரிசோதனைக்காக எடுத்து சென்றுள்ளனர். முடிவு வந்த பின்னே நோய் குறித்த காரணம் தெரியும்,' என வனத்துறையினர் தெரிவித்தனர். கடந்த 2 மாதத்தில் கூடலூர் வனக்கோட்டத்தில் 4 யானைகள் பல்வேறு காரணங்களால் இறந்துள்ளன.