சுகாதாரத்தை தொடர்ந்து மரம் நடுவதிலும் சாதனை படைத்தது இந்தூர் நகரம்
சுகாதாரத்தை தொடர்ந்து மரம் நடுவதிலும் சாதனை படைத்தது இந்தூர் நகரம்
சுகாதாரத்தை தொடர்ந்து மரம் நடுவதிலும் சாதனை படைத்தது இந்தூர் நகரம்
ADDED : ஜூலை 14, 2024 09:58 PM

போபால்: ம.பி., மாநிலத்தின் இந்தூர் நகரம் சுகாதாரத்தை அடுத்து 24 மணி நேரத்தில் 12 லட்சம் மரங்கள் நடப்பட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து கின்னஸ் சாதனை ஆலோசகர் நிஷ்கல் பரோட் கூறியதாவது: இந்தூரில் 'ஏக் ட்ரீ மா கே நாம்' பிரச்சாரத்தின் கீழ் இந்தூரில் 2,649 இடங்களில் மொத்தம் 51 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட முடிவு செய்யப்பட்டது.
இதன் முதற்கட்டமாக கடந்த 13-ம் தேதி இரவு 7.03 மணிக்கு துவக்கப்பட்டு 14-ம் தேதி மாலை 7.30 மணியுடன் முடிவடைந்தது. 14-ம் தேதி 5 மணி அளவில் முந்தைய சாதனையான அசாம் மாநிலத்தில் 24 மணி நேரத்தில் நடப்பட்ட 9,26,000 மரங்கள் சாதனை முறியடிக்கப்பட்டது.
இதனையடுத்து 24 மணி நேரத்திற்குள் அதிகபட்ச மரங்களை நட்டு இந்தூர் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. சாதனைக்கான சான்றிதழை ம.பி., முதல்வர் மோகன் யாதவ் பெற்றுக்கொண்டார்.
இந்தியாவின் தூய்மையான நகரங்களில் இந்தூர் தொடர்ந்து ஏழாவது முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.