/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/முதியோர் பென்ஷன்: சபையில் காரசார விவாதம்முதியோர் பென்ஷன்: சபையில் காரசார விவாதம்
முதியோர் பென்ஷன்: சபையில் காரசார விவாதம்
முதியோர் பென்ஷன்: சபையில் காரசார விவாதம்
முதியோர் பென்ஷன்: சபையில் காரசார விவாதம்
ADDED : ஆக 26, 2011 12:26 AM
புதுச்சேரி : முதியோர் பென்ஷன் தொடர்பாக சட்டசபையில் காரசார விவாதம் நடந்தது.
கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ஓம்சக்தி சேகர் பேசினார். அப்போது நடந்த விவாதம்: ஓம்சக்தி சேகர்: முதியோர்களுக்கு ரூ.2000 ஓய்வூதியம் கொடுப்போம் என தேர்தல் வாக்குறுதியில் கூறினீர்கள். அதற்கான அறிவிப்பு கவர்னர் உரையில் இல்லை. புதுச்சேரியில் ஓய்வூதியம் பெறும் முதியோர்களின் எண்ணிக்கை ஒரு லட்சம் இருக்கும். இதில், 20 ஆயிரம் பேருக்கு ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது. முதல்வர்: தணிக்கை அதிகாரிகள் முதியோர் ஓய்வூதியம் பெறுபவர்கள் குறித்து தணிக்கை செய்யும் போது, 55 வயதுக்கு கீழுள்ளவர்கள் ஓய்வூதியம் பெறுவது தெரிய வந்ததன் அடிப்படையில், நடவடிக்கை எடுத்து, தகுதியற்றவர்கள் நீக்கப்பட்டனர். அவ்வாறு நீக்கப்பட்டவர்கள், வயதை நிரூபிப்பதற்கான தகுந்த சான்றிதழ்கள் கொடுத்தால், அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. புரு÷ஷாத்தமன் : ஓய்வூதியம் பெறுவதற்கான வயது வரம்பு என்ன. முதல்வர்: 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. ஓம்சக்தி சேகர்: ஏற்கனவே ஓய்வூதியம் பெற்று வந்தவர்களில் பலருக்கு நிறுத்தப்பட்டு, அதில் மிச்சப்படுத்திய தொகையில்தான் ரூ.1000 பென்ஷன் தருகிறீர்கள். இத்திட்டத்திற்கு புதிதாக நிதி ஏதும் ஒதுக்கவில்லை. முதல்வர்: 20 ஆயிரம் பேர் எனக் கூறுவது தவறு. நீக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. கிட்டத்தட்ட 700 என்ற அளவில்தான் இருக்கும். ஓம்சக்தி சேகர்: அவ்வளவு இருக்காது. முதல்வர் சரியான எண்ணிக்கையைக் கூற வேண்டும். நீங்கள் கூறுவது சரியென்றால் நான் கூறுவதும் சரிதான். அமைச்சர் ராஜவேலு: ஓய்வூதியம் பெற்றவர்களில் தகுதியற்ற 1490 பேர் நீக்கப்பட்டுள்ளனர். இத் திட்டத்திற்கு ரூ.47 கோடி ஒதுக்கிக் கொடுத்துள்ளோம்.