ஊழல் குறித்து பார்லி.,யில் ராகுல் திடீர் பேச்சு: எதிர்கட்சியினர் கூச்சல் - குழப்பம்
ஊழல் குறித்து பார்லி.,யில் ராகுல் திடீர் பேச்சு: எதிர்கட்சியினர் கூச்சல் - குழப்பம்
ஊழல் குறித்து பார்லி.,யில் ராகுல் திடீர் பேச்சு: எதிர்கட்சியினர் கூச்சல் - குழப்பம்

ஒரு சட்டம் மட்டும் ஊழலை ஒழித்து விடாது ராகுல் பேச்சு : இன்று மதியம் 12 மணியளவில் காங்., பொது செயலர் ராகுல் லோக்சபாவிற்கு வந்தார். இவர் தனது பேச்சில் கூறியதாவது: ஊழல் ஒழிப்பதில் நல்லதொரு அரசியல் களம் தேவைப்படுகிறது. நாட்டில் ஊழல் விவகாரத்தை முன்னிறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திய அன்னா ஹசாரேவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஒரு சட்டம் ( லோக்பால் ) மட்டும் கொண்டு வருவதால் ஊழலை முற்றிலும் ஒழித்து விட போதுமானதாக அமைந்து விடாது. வேரோடு ஒழித்து விட முடியாது. ஊழலை ஒழிப்பது என்பது ஒரு சாதாரண விஷயமல்ல. பன்முகம் சம்பந்தப்பட்டது. ஒரு பலமான சுதந்திர தன்மை கொண்ட அரசியல் அமைப்பின் அங்கமாக (தேர்தல் கமிஷன் போல் ) லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட வேண்டும். அதே நேரத்தில் பார்லி.,யின் ஜனநாயகத்தை பலவீனப்படுத்தக்கூடாது. பார்லி., அதிகாரத்தில் பைபாஸ் வழியாக யாரும் உள்ளே நுழைய அனுமதிக்க முடியாது. இவர் பேசிக்கொண்டிருக்கும் போது எதிர்கட்சியினர் கடும் எதிர்ப்பை தெரிவித்து கூச்சலிட்டனர்.
பிரியங்கா கவனித்தார்: பார்லி.,க்கு வரும் முன்னர் ராகுல் பிரதமரை சந்தித்து விட்டு சென்றார். ராகுல் உரை நிகழ்த்தியபோது அவரது சகோதரி பிரியங்கா பார்லி.,க்கு வந்து அவரது உரையை கவனமாக கேட்டார்.
பார்லி.,யில் ராகுல் பேசிக்கொண்டிருந்த தகவல் ஹசாரேவுக்கு தெரிவிக்கப்பட்டதும், மேடையில் இருந்து எழுந்து வந்தோமாதரம், வந்தேமாதரம், இன்குலாப் என 2 முறை ஆதரவாளர்களை பார்த்து குரல் எழுப்பி பின்னர் அமர்ந்தார்.
அறிவுரை தேவையில்லை : பா.ஜ., எதிர்ப்பு : ராகுல் போதனை எங்களுக்கு தேவையில்லை என பா.ஜ., ராகுல் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ளது. நாங்கள் பிரதமர் பதில் ஏற்றுக்கொள்ள முடியும். அரசை வழி நடத்தி செல்வது ராகுலா அல்லது பிரதமரா என கேள்வி எழுப்பியுள்ளது. ராகுல் உரை எங்களுக்கு தேவையில்லை, லோக்பால் தான் தேவை என இக்கட்சி தெரிவித்துள்ளது,
மலை ஏறுவது முதல் கட்டம் என்கிறார் கிரண்பேடி: ராகுல் பேச்சு குறித்து கருத்து தெரிவித்த கிரண்பேடி, லோக்பால் என்பது மிக உயரமானது. இதில் பல மலைகள் ஏற வேண்டியுள்ளது. ஆனால் அதற்கு முன்னதாக எவரஸ்ட் சிகரத்தை அடையமுடியாது, முதல் கட்ட பணிகளை உடனடியாக துவக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். என ராகுல் உரைக்கு பதில் அளிக்கும் விதமாக தெரிவித்தார்.