"ஊழலுக்கு எதிரான புரட்சி தீ தொடர்ந்து எரிய வேண்டும்' : ஹசாரே
"ஊழலுக்கு எதிரான புரட்சி தீ தொடர்ந்து எரிய வேண்டும்' : ஹசாரே
"ஊழலுக்கு எதிரான புரட்சி தீ தொடர்ந்து எரிய வேண்டும்' : ஹசாரே
UPDATED : ஆக 22, 2011 12:49 AM
ADDED : ஆக 21, 2011 11:39 PM

புதுடில்லி:'ஊழலுக்கு எதிரான புரட்சித் தீ, தொடர்ந்து எரிய வேண்டும்.
வரும் 30ம் தேதிக்குள் ஜன்லோக்பால் மசோதாவை, அரசு தாக்கல் செய்யாவிட்டால், இதற்கு முன் நடந்திராத வகையில், மிகப் பெரிய அளவிலான போராட்டங்கள் நடத்தப்படும்' என, அன்னா ஹசாரே, ஆவேசமாக கூறினார்.
ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்து வரும் அன்னா ஹசாரே, நேற்று இரவு பேசியதாவது:ஊழலுக்கு எதிரான புரட்சித் தீ, தற்போது பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. நான் உயிரோடு இருந்தாலும், இல்லாவிட்டாலும், இந்தத் தீ, தொடர்ந்து எரிய வேண்டும். லோக்பால் மசோதா விவகாரத்தில், அரசு எங்களுக்கு துரோகம் செய்து விட்டது.ஊழலில் இருந்து நாட்டை விடுவிக்க, இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும். வரும் 30ம் தேதிக்குள், ஜன்லோக்பால் மசோதாவை, பார்லிமென்டில் மத்திய அரசு தாக்கல் செய்யாவிட்டால், இதற்கு முன் நடந்திராத வகையில், மிகப் பெரிய அளவிலான போராட்டங்கள் நடத்தப்படும்.இவ்வாறு ஹசாரே பேசினார்.


