/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ராமகிருஷ்ணா பள்ளியில் சுதந்திர தின விழாராமகிருஷ்ணா பள்ளியில் சுதந்திர தின விழா
ராமகிருஷ்ணா பள்ளியில் சுதந்திர தின விழா
ராமகிருஷ்ணா பள்ளியில் சுதந்திர தின விழா
ராமகிருஷ்ணா பள்ளியில் சுதந்திர தின விழா
ADDED : ஆக 18, 2011 04:34 AM
புதுச்சேரி : ராமகிருஷ்ணா வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில், புதுச்சேரி மத்திய அரிமா சங்கம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
அரிமா சங்கத் தலைவர் சாரங்கபாணி தேசியக் கொடியேற்றினார். பானுமதி தலைமை தாங்கினார். டாக்டர் நல்லாம் வெங்கட்ராமையா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். சேவா சங்கத் தலைவர் ராமகிருஷ்ண சிங், தாளாளர் கணேசன், மகாவீர் சோர்டியா, வீரேந்திரகுமார் உச்சாத் வாழ்த்திப் பேசினர்.
கடந்த கல்வியாண்டில் பள்ளியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளுக்கு ரொக்கப் பரிசினை, ரெமி ஜெரால்டு வழங்கினார். பத்தாம் வகுப்பில் முதல் இரு இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு தங்கக் காசு, 3, 4ம் இடம் பெற்றவர்களுக்கு ஊக்கப் பரிசு வழங்கப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாஸ்கரன் பரிசு வழங்கினார். ஏற்பாடுகளை, துணை முதல்வர் சுந்தரமூர்த்தி செய்திருந்தார்.