/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/நெல்லையில் 3 ஆயிரம் போலீசார் குவிப்புநெல்லையில் 3 ஆயிரம் போலீசார் குவிப்பு
நெல்லையில் 3 ஆயிரம் போலீசார் குவிப்பு
நெல்லையில் 3 ஆயிரம் போலீசார் குவிப்பு
நெல்லையில் 3 ஆயிரம் போலீசார் குவிப்பு
திருநெல்வேலி : நெல்லையில் சுதந்திரதினத்தையொட்டி 3 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.நாடு முழுவதும் சுதந்திரதினவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
மேலப்பாளையத்தில் 3 ஆயிரம் போலீசார் : நெல்லை மாநகர எல்லையில் மேலக்கருங்குளம், பழைய பேட்டை, தச்சநல்லூர், வி.எம்.சத்திரம், கே.டி.சி., நகர், டக்கரம்மாள்புரம் செக்போஸ்ட்களில் வாகன சோதனை மும்முரமாக நடந்தது. பாப்புலர் ப்ரன்ட் ஆப் இந்தியா சுதந்திர தின அணிவகுப்பு நடத்தவிருப்பதாக அறிவித்த மேலப்பாளையத்தில் நேற்று காலை முதல் வாகன சோதனை மும்முரமாக நடந்தது.துணை கமிஷனர் மார்ஸ்டன் லியோ தலைமையில் உதவி கமிஷனர்கள் ராமச்சந்திரன், ஆறுமுகம் தலைமையில் போலீசார் மேலப்பாளையம் பஜார், வி.எஸ்.டி., ஜங்ஷன் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்புப்பணியில் ஈடுபட்டனர். மேலப்பாளையத்திற்கு வரும் அனைத்து ரோடுகளிலும் உதவி கமிஷனர்கள் தலைமையில் பேரிக்கார்டு அமைத்து வாகனங்கள் சோதனையிடப்பட்டன.சுதந்திரதின அணிவகுப்பு குறித்த போஸ்டர்களுடன் வந்த குமரி மாவட்ட வாலிபர், வாகன பாஸ்களுடன் வந்த இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். நெல்லை, தூத்துக்குடி, குமரி, விருதுநகர், தேனி, ராமநாதபுரம் மாவட்டங்கள், சிறப்புக்காவல் படை, அதிரடிப்படை போலீசார் உட்பட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் மேலப்பாளையத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.சுதந்திரதினத்தையொட்டி முன்னிட்டு நேற்று இரவு மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.


