கிரிவலப்பாதை அமைக்க நடவடிக்கை : அமைச்சர் சண்முகநாதன்
கிரிவலப்பாதை அமைக்க நடவடிக்கை : அமைச்சர் சண்முகநாதன்
கிரிவலப்பாதை அமைக்க நடவடிக்கை : அமைச்சர் சண்முகநாதன்
ADDED : ஆக 12, 2011 02:09 AM
சென்ன: ''ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலையை சுற்றி கிரிவலப்பாதை அமைக்க அரசு
நடவடிக்கை எடுக்கும்,'' என, சட்டசபையில் அமைச்சர் சண்முகநாதன்
தெரிவித்தார்.சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது, இதுதொடர்பான கேள்விக்கு
அமைச்சர் சண்முகநாதன் பதிலளித்து பேசுகையில்,''விருதுநகர் மாவட்டம்,
ஸ்ரீவில்லிபுத்தூர், திருவண்ணாமலை சீனிவாசப் பெருமாள் திருக்கோவில், இந்து
சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் நாச்சியார்
கோவிலின் உபகோவில்.திருவண்ணாமலை மலைக்குன்றின் மீது சீனிவாச பெருமாள்
கோவில் அமைந்துள்ளது.
இம்மலைக்குன்று, திருக்கோவிலுக்குச் சொந்தமானது.
மலைக்குன்றை சுற்றி கிரிவலப்பாதை அமைக்கப்படும்,'' என்றார்


