Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/புதிய உறுப்பினர்களுக்கும் கூட்டுறவு பயிர்க் கடன்

புதிய உறுப்பினர்களுக்கும் கூட்டுறவு பயிர்க் கடன்

புதிய உறுப்பினர்களுக்கும் கூட்டுறவு பயிர்க் கடன்

புதிய உறுப்பினர்களுக்கும் கூட்டுறவு பயிர்க் கடன்

ADDED : ஜூலை 24, 2011 11:44 PM


Google News
தேனி : கூட்டுறவு சங்கங்களில், புதிய உறுப்பினர்களுக்கும் கடன் வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது.

விவசாய உற்பத்தியை பெருக்கவும், விவசாயிகளுக்கு கடன் உதவிகளை அதிகரிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, சமீபத்தில் நடந்த கூட்டுறவு அதிகாரிகள் கூட்டத்தில், உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. பயிர்க்கடன் வழங்குவதில், ஏற்கனவே பெற்று வருபவர்களே மீண்டும் மீண்டும் பயனடையும் நிலை உள்ளது. இதை மாற்றவும், அனைத்து விவசாயிகளும், கடன் பெற வசதியாக புதிய உறுப்பினர்களுக்கும் பயிர்க்கடன் வழங்கப்பட உள்ளது. இது தவிர ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது. விவசாய நிலம் இருந்து உரிய ஆவணங்கள் இருந்தால் மட்டும் போதும். அனைவரும் கூட்டுறவு சங்கங்களில் கடன் உதவி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us