ஐ.எம்.எப். தலைவர் லகார்டோ மீது ஊழல் புகார்
ஐ.எம்.எப். தலைவர் லகார்டோ மீது ஊழல் புகார்
ஐ.எம்.எப். தலைவர் லகார்டோ மீது ஊழல் புகார்
ADDED : ஆக 05, 2011 03:06 AM

பாரீஸ்:சர்வதேச நிதி ஆணையத்தின் தலைவரான கிறிஸ்டியன் லகார்டே (55) மீது ஊழல் புகார் எழுந்ததைத்தொடர்ந்து இது குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் கிறிஸ்டியன் லகார்டேவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பிரான்ஸ் அதிபர் சர்கோஸி நம்பிக்கைக்குரியவராக இருந்த லகார்டே, கடந்த மாதம் தான் சர்வதேச நிதிஆணையத்தின் (ஐ.எம்.எப்) முதல் பெண் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் கிறிஸ்டியன் லகார்டோ அந்நாட்டின் நிதி அமைச்சராக இருந்த போது , கடந்த 1990-ம் ஆண்டு விளையாட்டு வீரர்கள் அணியும் காலனி தயாரிப்பு நிறுவனத்துடன் ஏற்பட்ட ஒபபந்தத்தில், தொழிலதிபருக்கு சாதகமாக செயல்பட்டுளளார். இதில் 400 மில்லியன் டாலர் அளவுக்கு ஊழல் புரிந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.. இது தொடர்பாக தொழிலதிபருக்கும், லகார்டேவுக்கும் இடையே கடந்த 2008-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டு அரசு வங்கி மூலம் நடந்த பணிபறிமாற்றத்தின் போது தெரியவந்துள்ளது. இந்த ஊழல் விவகாரம் தற்போது வெளியானது பிரான்சில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பிரான்ஸ் கோர்டின் நீதிபதி ஜெராட் பாலிசெஸி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் சிறப்பு கோர்ட் அமைத்து லகார்டேவை விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விசாரணை கமிஷன் குறித்து லகார்டே வக்கீல் யூவிஸ்ரிப்பிகியூட் கூறுகையில், விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டதை வரவேற்கிறோம், வழக்கை சந்திக்க தயாராக உள்ளோம் , வழக்கில் அடிப்படை உண்மையினை முதலில் தெரிந்து கொண்டே பிறகு முடிவு செய்வோம் என்றார்.ஊழல் புகார் குறித்து ஒரு மாதத்தில் சிறப்புகோர்டில் அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஐ.எம்.எப். அமைப்பின் முன்பு தலைவராக இருந்து டொமினிக் ஸ்டிராஸ்கான் , பாலியல் வழக்கில் பரபரப்பிற்குள்ளாகி பதவியிழந்தார். தற்போது லகார்டே ஊழல் புகாரில் சிக்கியுள்ளார்.