/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/முன்னூறு ஆண்டு கால ஆலமர கிளை முறிந்தது தொல்லியல்துறையினர் கவனத்தில் கொள்வார்களா?முன்னூறு ஆண்டு கால ஆலமர கிளை முறிந்தது தொல்லியல்துறையினர் கவனத்தில் கொள்வார்களா?
முன்னூறு ஆண்டு கால ஆலமர கிளை முறிந்தது தொல்லியல்துறையினர் கவனத்தில் கொள்வார்களா?
முன்னூறு ஆண்டு கால ஆலமர கிளை முறிந்தது தொல்லியல்துறையினர் கவனத்தில் கொள்வார்களா?
முன்னூறு ஆண்டு கால ஆலமர கிளை முறிந்தது தொல்லியல்துறையினர் கவனத்தில் கொள்வார்களா?
xசெஞ்சி : செஞ்சி கோட்டையில் உள்ள 300 வயதுடைய ஆலமரங்களை காப்பாற்ற தொல்லியல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதனை தடுக்க பூச்சி கொல்லி மருந்துகளை தகுந்த இடைவெளியில் செலுத்துவதன் மூலம் வண்டுகளை அழித்து ஆலமரங்களை காப்பாற்ற முடியும் என்கின்றனர் வேளாண்மைத்துறையில் அனுபவம் பெற்றவர்கள். தற்போது செஞ்சிகோட்டை ராஜகிரி மலையடிவாரத்தில் நான்கு பெரிய ஆலமரங்களும், வீர ஆஞ்சநேயர் கோவிலில் ஒரு ஆலமரமும், கிருஷ்ணகிரி கோட்டை டிக்கட் கவுண்டர் எதிரில் உள்ள ஒரு ஆலமரமும் இதே போல் பூச்சி தாக்குதலுக்கு ஆளாகி உள்ளன. இதில் உள்ள சில கிளைகள் வண்டு துளைத்ததால் பட்டு போய் உள்ளன. வீர ஆஞ்சநேயர் கோவில் அருகில் இருந்த பெரிய ஆலமரத்தின் கிளை ஒன்று வண்டுகள் தாக்குதலுக்கு ஆளாகி நேற்று முன்தினம் இரவு முறிந்து விழுந்தது. இயற்கை எழிலோடு செஞ்சி கோட்டை காட்சியளிப்பதற்கு துணையாக இருக்கும் இந்த ஆலமரங்களை காப்பற்ற வேண்டியது மிகவும் அவசியமானது. இந்திய தொல்லியல் துறையினர், வேளாண்மைத் துறையினருடன் இணைந்து பாரம்பரியம் மிக்க இந்த ஆலமரங்களை அழிவில் இருந்து பாதுகாப்பதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.