Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ஏர்இந்தியா ஊழியர்களுக்கு 8-ம் தேதி சம்பளம்

ஏர்இந்தியா ஊழியர்களுக்கு 8-ம் தேதி சம்பளம்

ஏர்இந்தியா ஊழியர்களுக்கு 8-ம் தேதி சம்பளம்

ஏர்இந்தியா ஊழியர்களுக்கு 8-ம் தேதி சம்பளம்

ADDED : ஆக 06, 2011 07:28 AM


Google News
புதுடில்லி: ஏர்இந்தியா நிறுவன ஊழியர்களுக்கு ஜூ‌ன்,ஜூலை ஆகிய மாதங்களுக்கான சம்பளம் நாளை மறுநாள் (திங்கள் கிழமை )வழங்கப்படவுள்ளதாக மத்திய அரசுதெரிவித்துள்ளது.

இது குறித்து ஏர்இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ஏர்இந்தியாவின் தற்போது 40 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதத்திற்குரிய சம்பளம் வழங்கப்படவில்லை. கடும் நிதி நெருக்கடி, ஊழியர்களின் சம்பள, குறைந்த கட்டணம், எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் இந்த தாமதம் ஏற்பட்டு்ள்ளது. மாதந்தோறும் ரூ. 600 கோடி வரை நஷ்டம் ஏற்படுகிறது. மேலும் ஏர்இந்திய பிரச்னையை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மன்மோகன்சிங் ஏர்இந்தியா ஊழியர்களுக்கு விரைவில் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார். அதன்படி வரும் 8-ம் தேதி (திங்கள் கிழமை) ஏர்இந்தியா ஊழியர்களின் திறமை அடிப்படையில் ஊதிய உயர்வுடன் சம்பளம் வழங்கப்படவுள்ளது. இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us