/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/குற்றாலம் டவுன் பஞ்.,ஆஸ்பத்திரி தரம் உயர்த்த கோரிக்கைகுற்றாலம் டவுன் பஞ்.,ஆஸ்பத்திரி தரம் உயர்த்த கோரிக்கை
குற்றாலம் டவுன் பஞ்.,ஆஸ்பத்திரி தரம் உயர்த்த கோரிக்கை
குற்றாலம் டவுன் பஞ்.,ஆஸ்பத்திரி தரம் உயர்த்த கோரிக்கை
குற்றாலம் டவுன் பஞ்.,ஆஸ்பத்திரி தரம் உயர்த்த கோரிக்கை
ADDED : ஆக 08, 2011 03:45 AM
குற்றாலம் : குற்றாலம் டவுன் பஞ்., ஆஸ்பத்திரியை தரம் உயர்த்த வேண்டுமென சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நெல்லை மாவட்டத்தில் ஆன்மிக தலங்களையும், அருவிகளையும் உள்ளடக்கிய புண்ணிய ஸ்தலமாகவும், சுற்றுலா ஸ்தலமாகவும் குற்றாலம் உள்ளது.
இங்கு டவுன் பஞ்., நிர்வாகம் மூலம் ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரிக்கு கடந்த 2009ம் ஆண்டு சிகிச்சை பெற வந்த வெளி நோயாளிகளின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 130 பேர். 2010ம் ஆண்டு சிகிச்சை பெற வந்த வெளி நோயாளிகளின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 963 பேர். கடந்த 2011ம் ஆண்டு ஜூலை மாதம் மட்டும் சிகிச்சை பெற வந்த வெளி நோயாளிகள் 3 ஆயிரத்து 600 பேர்.குற்றாலம் சீசனை முன்னிட்டு வெளிநோயாளிகள், சுற்றுலா பயணிகள், சுற்றுவட்டார பொதுமக்கள் என ஒவ்வொரு தடவையும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இந்த ஆஸ்பத்திரியை தரம் உயர்த்த வேண்டுமென அப்போதய எம்எல்ஏ ரவிஅருணன் கோரிக்கை விடுத்தார்.அதன்பிறகு எவரும் இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தற்போது இந்த ஆஸ்பத்திரியில் பியூன் மற்றும் அலுவலக பணியாளர் என இரண்டு பேர் மட்டுமே வேலை செய்து வருகின்றனர். பார்மஸிஸ்ட், துப்புரவு பணியாளர், வாட்ச்மேன் பணியிடங்கள் இதுவரை நிரப்பபடவில்லை. இதனால் அவசர, அத்தியாவசிய பணிகளுக்கு லீவு கூட எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. டாக்டர் காலையிலும், இரவிலும் வெளியூர்களிலிருந்து தினசரி வந்து செல்கிறார்.எனவே சுற்றுலா மையமாக சிறந்து விளங்கும் குற்றாலத்தில் அரசு ஆஸ்பத்திரி அமைக்க சம்பந்தப்பட்ட நிர்வாகம் முன்வர வேண்டும். மேலும் தற்போது செயல்பட்டு வரும் ஆஸ்பத்திரியில் காலியிடங்களை நிரப்ப வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


