/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/காரைக்கால் வாரச்சந்தையை இடமாற்றம் செய்ய மனுகாரைக்கால் வாரச்சந்தையை இடமாற்றம் செய்ய மனு
காரைக்கால் வாரச்சந்தையை இடமாற்றம் செய்ய மனு
காரைக்கால் வாரச்சந்தையை இடமாற்றம் செய்ய மனு
காரைக்கால் வாரச்சந்தையை இடமாற்றம் செய்ய மனு
ADDED : ஆக 03, 2011 10:25 PM
காரைக்கால் : காரைக்கால் வார சந்தையை இடமாற்றம் செய்ய வேண்டும் என நாஜிம் எம்.எல்.ஏ., கலெக்டரிடம் மனு கொடுத்தார்.
நாஜிம் எம்.எல்.ஏ., கலெக்டர் பிராங்களின் லால்டின் குமாவை சந்தித்து கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: காரைக்காலில் முன்னாள் அமைச்சர் கோவிந்தராஜன், முருகையனார் திடலில் வார பொதுசந்தையை கொண்டு வந்தார். தற்போது மக்கள் தொகை பெருக்கத்தால் ஞாயிற்றுக் கிழமைகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. மேலும் இங்கு விரைவில் தற்காலிக மார்க்கெட் வர உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.
இத்திடலில் இயங்கும் சந்தையை திருநள்ளார் வீதியில் இயங்கும் ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வார சந்தை முடிவுற்ற பிறகு இரவு நேரத்தில் புதிய பஸ் நிறுத்தம் அருகில் உள்ள இடத்தில் மாலைநேர சந்தை நடக்கிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
அதற்கும் சரியான இடத்தை தேர்வு செய்து தர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.