/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/தொடரும் மின்தடையால் தேர்தல் பணியில் தொய்வுதொடரும் மின்தடையால் தேர்தல் பணியில் தொய்வு
தொடரும் மின்தடையால் தேர்தல் பணியில் தொய்வு
தொடரும் மின்தடையால் தேர்தல் பணியில் தொய்வு
தொடரும் மின்தடையால் தேர்தல் பணியில் தொய்வு
ADDED : அக் 02, 2011 01:50 AM
திருப்பூர் : தொடரும் மின்தடையால் திருப்பூரில், தேர்தல் பணி தொய்வடைந்தது.கடந்த சில தினங்களாக, அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது; மின்வினியோகம் சரிவர இல்லாததால் வீடுகளிலும், தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் பாதிப்பு ஏற்பட்டது.நேற்று முன்தினம் உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனுக்கள், பரிசீலனை நடந்தது; பெறப்பட்ட மனுக்கள், நிராகரிக்கப்பட்ட மனுக்கள் மற்றும் அதற்கான காரணம் குறித்த விவரங்கள் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலம் கம்ப்யூட்டரில் பதிவு செய்ய வேண்டும்.
இந்த விவரங்களும், இறுதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட வேட்பு மனுக்களின் முழு விவரங்கள், அகர வரிசைப்படியாக வேட்பாளர் பெயருடன் மாவட்ட தேர்தல் பிரிவு அலுவலகத்துக்கு இ-மெயில் மூலம் அனுப்ப வேண்டும். முழுமையான விவரங்கள் மாவட்ட அளவில் தொகுக்கப்பட்டு, மாநில தேர்தல் கமிஷனுக்கு அனுப்ப வேண்டும்.விவரங்களை தொகுத்து அளிக்கும் பணி அனைத்து உள்ளாட்சி பகுதிகளிலும் தாமதம் ஏற்பட்டது. தொடர் மின்தடையால், வேட்பு மனு ஏற்கப்பட்ட வேட்பாளர் பெயர்கள் அகர வரிசைப்படியாக தொகுக்கும் பணி பாதிக்கப்பட்டது. இப்பட்டியல் தயாரிக்க முடியாமல் தேர்தல் அலுவலர்கள் சிரமப்பட்டனர்.மின் தடை: தென்னம்பாளையம் துணை மின் நிலையத்திலிருந்து கலெக்டர் அலுவலக வளாகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது. நேற்று முழுவதும் இப்பகுதியில் மாதாந்திர மின் பராமரிப்புக்காக மின்வினியோகம் இல்லை. கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தேர்தல் பிரிவு அலுவலகத்தில் காலை முதல் மின்சாரம் இன்றி, தேர்தல் பணி முற்றிலும் முடங்கியது. ஜெனரேட்டர் மூலம், தேர்தல் பிரிவு அலுவலகம் உள்ள பகுதிக்கு மின் இணைப்பு இல்லாததால், ஜெனரேட்டர் இருந்தும் அதைப் பயன்படுத்த முடியவில்லை.


