/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/மருத்துவத் துறைக்கு ரூ.4,761 கோடி ஒதுக்கீடுமருத்துவத் துறைக்கு ரூ.4,761 கோடி ஒதுக்கீடு
மருத்துவத் துறைக்கு ரூ.4,761 கோடி ஒதுக்கீடு
மருத்துவத் துறைக்கு ரூ.4,761 கோடி ஒதுக்கீடு
மருத்துவத் துறைக்கு ரூ.4,761 கோடி ஒதுக்கீடு
ADDED : செப் 16, 2011 01:33 AM
திருப்பூர்:''மருத்துவத் துறைக்கு, தமிழக அரசு இந்தாண்டு ரூ.4,761 கோடி
ஒதுக்கியுள்ளது; இது, கடந்தாண்டை விட 20 சதவீதம் அதிகம்,'' என எம்.எல்.ஏ.,
தங்கவேல் பேசினார்.மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை சார்பில்
மருத்துவமனை தின விழா, மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் நேற்று நடந்தது.
மருத்துவப் பணிகள் துறை இணை இயக்குனர் திருமலைச்சாமி வரவேற்றார்.
ஆண்டறிக்கையை மருத்துவமனை கண்காணிப்பாளர் கேசவன் வாசித்தார்.கலெக்டர் மதிவாணன் பேசுகையில்,''சேவை நோக்கில் ஊழியர்கள் பணிபுரிய
வேண்டும்; நோயாளிகளின் புண்ணியஸ்தலமாக அரசு மருத்துவமனை விளங்க வேண்டும்,'' என்றார்.தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., தங்கவேல்
பேசியதாவது:திருப்பூரில் மருத்துவக் கல்லூரி ஏற்படுத்த வேண்டும் என்ற
கோரிக்கை, சட்டசபையில் மீண்டும் வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு, தனி நபர்
மருத்துவ செலவுக்கு ஒதுக்கப்படும் தொகை போதிய அளவு இருப்பதில்லை.
மருத்துவப் பணிகளில் ஏழை நாடாகவே இந்தியா உள்ளது.என்றாலும் கூட, இந்தாண்டு மருத்துவத் துறைக்கு
4,761 கோடி ரூபாய் தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. கடந்தாண்டை விட, இது 20
சதவீதம் அதிகம். இருப்பினும் தன்னார்வ தொண்டு அமைப்புகள் உதவியும்
மருத்துவமனைகளுக்கு அவசியம்.மக்களின் மொத்த வருவாயில் மத்திய அரசு 1.4
சதவீதம் மட்டுமே மருத்துவப் பணிக்கு நிதி ஒதுக்கியுள் ளது. இதை மூன்று
சதவீதமாக அதிகரிக்க வேண்டும். தனியார் மருத்துவமனைக்கு இணையான சேவை,
சிகிச்சை அளிக்க, அவர்களை மிஞ்சும் வகையில் உற்சாகமாக பணியாற்ற
பணியாளர்களது சம்பளம், பணி பாது காப்பு ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும்.
1,400க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் மாநிலம் முழுவதும் உள்ளனர்.
அவர்களை நிரந்தரமாக்க வேண்டும், என்றார்.தொடர்ந்து, ஏ.டி.எஸ்.பி., பாஸ்கரன்
பேசினார். கடந்த ஆண்டில் ரத்த தானம், கண் சிகிச்சை முகாம், இலவச உடல்
பரிசோதனை முகாம் நடத்திய தன்னார்வ தொண்டு அமைப்பு கள், கல்லூரிகள், ரோட்டரி
கிளப்புகளை பாராட்டி, சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.சீனியர் டாக்டர்
மதிவாணன் நன்றி கூறினார். அதன்பின், செவிலியர் பயிற்சி பள்ளி மாணவியரின்
வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடந்தது.


