Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/அரசு மோசமாக நடத்தியது: ஹசாரே குழு

அரசு மோசமாக நடத்தியது: ஹசாரே குழு

அரசு மோசமாக நடத்தியது: ஹசாரே குழு

அரசு மோசமாக நடத்தியது: ஹசாரே குழு

UPDATED : ஆக 19, 2011 07:22 PMADDED : ஆக 19, 2011 06:38 PM


Google News
புதுடில்லி: ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதமிருக்கும் ஹசாரே குழுவில் இடம் பெற்றுள்ள அர்விந்த் கெஜ்ரிவால், அங்கு பேசும்போது, மத்திய அரசு இந்த போராட்டத்தின் வலிமையை தெரிந்து கொள்ள வேண்டும். தங்களை எந்த நேரத்திலும் கைது செய்யலாம் என அரசு எண்ணுகிறது. அரசின் நடவடிக்கைகள் மோசமானது. தங்களை அரசு மோசமாக நடத்தியது. இது வரை கணக்கெடுக்கப்பட்ட விபரங்களின் அடிப்படையில் எங்கள் குழுவிற்கு மக்கள் ஆதரவு அதிகமாக உள்ளது. இந்த போராட்டத்துக்கு நாங்கள் 5 பேர் தான் காரணம் என நினைக்கிறது. இந்த போராட்டத்தை மக்கள் தான் ஆரம்பித்து வைத்துள்ளனர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். குழுவில் எந்தவித பிளவும் இல்லை. மத்திய அரசு ,நிலைக்குழுவை பாதுகாப்பு கேடயமாக பயன்படுத்துகிறது. நீதிபதிகளை மசோத வரம்பிற்குள் வெளியேவைத்து மக்களை அரசு ஏமாற்றுகிறது. என கூறினார்.

சாந்தி பூஷன் பேசுகையி்ல், ஹசாரேவின் ஜன் லோக்பால் மசோதவை பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட வேண்டும். மக்களின் மசோதாவை நிறைவேற்ற வேண்டும். திறந்த மனதுடன் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார். ஆனால் ஊழலுக்கு எதிராக ஒரு போதும் உடன்படமாட்டோம் என்று கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us